சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு இராயப்பேட்டையில் விளக்கப் பொதுக்கூட்டம்

3 Min Read

ஆசிரியரின் வழிகாட்டுதல் எங்களுக்குப் பெரிய பலமும், பாதுகாப்புமாகும்!
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு உரை கழகத் துணைத் தலைவர் சிறப்புரையாற்றினார்

சென்னை, ஆக.20 ஆசிரியரின் வழி காட்டுதல் எங்களுக்குப் பெரிய பலமும், பாதுகாப்புமாகும் என்று மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில் கூறினார்.

தென் சென்னை மாவட்ட கழ கத்தின் சார்பில், இராயப்பேட்டை, வி.பி.ராமன் சாலை மற்றும் டாக்டர் நடேசன் சாலை சந்திப்பில், 17.08.2025, ஞாயிறு, மாலை 6.30 மணி அளவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தென் சென்னை மாவட்டத் தலை வர் இரா.வில்வநாதன் தலைமை யிலும், மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன்  ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கொள்கைப் பாடல்களுடன் ‘இசை நிகழ்ச்சி!’

முன்னதாக மாலை 5.30 மணி அளவில் அறிவுமானனின் கொள்கைப் பாடல்களுடன் ‘இசை நிகழ்ச்சி’ நடை பெற்றது. மாவட்ட இளைஞரணி செயலாளர்  பெரியார் யுவராஜ் வர வேற்புரை ஆற்றினார். மாவட்ட துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன் தொடக்க உரையாற்றினார்.

சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு உரை

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு கலந்து கொண்டு, சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும், சுயமரியாத இயக்க கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முனைப்புடன் செயல்படுவதை குறிப்பிட்டும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அணுகுமுறை எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. அவர் துணையாக இருந்து வழி காட்டுவது எங்களுக்கு பெரிய பலமும், பாதுகாப்பும் ஆகும்’ என்று சிறிது நேரம் பேசிவிட்டு விடை பெற்றுச் சென்றார்.

செயலவைத் தலைவர்

கழக செயலவைத் தலைவர் வழக்கு ரைஞர் ஆ.வீரமர்த்தினி, ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு’ நடைபெறுவதற்கான காரணங்களை விளக்கிக் கூறி உரை யாற்றினார்.

துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுயமரி யாதை இயக்கத்தின் வரலாற்றை எடுத்துரைத்தார்.

சுயமரியாதை இயக்கம் தோன்று வதற்கு முன், திராவிட சமுதாயம் எப்படி எல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்தது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும், தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, திராவிட சமுதாயத்தை மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றி, சுயமரி யாதையுடன் வாழ்வதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தந்தார். அதன் வழியில் திராவிடர் கழகம் பயணித்துப் போராடி பல உரிமைகளை பெற்றுத் தந்து கொண்டுள்ளது.

இன்றைய நிலையில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், திராவிடர் இயக்க அரசியல் கட்சி களுக்கு அறிவுரைகளை வழங்கி, பல சாதனைகளைப் படைத்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் நடைபெற உள்ள ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை’ சிறப்பாக நடத்தி வெற்றி அடைய செய்வோம் என்று விளக்கிக் கூறி சிறப்புரையாற்றினார்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் 85 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குத் தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் தோழர்கள் பய னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பங்கேற்றோர்

நந்தனம் மதி (தி.மு.க.பகுதி கழகச் செயலாளர்), மாமன்ற உறுப்பினர், கிருஷ்ணமூர்த்தி (121ஆவது வட்ட செயலாளர், தி.மு.க.), இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் ச.மகேந்திரன், இளைஞர் அணி துணைச் செயலாளர், இரா.மாரிமுத்து, திருவல்லிக்கேணி அப்துல்லா, தரமணி ம.ராஜு, எம். டி .சி. இராஜேந்திரன், மாவட்ட மகளிரணி தலைவர் வி. வளர்மதி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் மோகன்ராஜ், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வி.தங்கமணி, வி.யாழ்ஒளி, ஜெ. சொப்பன சுந்தரி, சங்கரி, சகானா பிரியா, வினோத் குமார், உதயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தபோதும் கூட்டத்தின் கருத்து மழையை பொது மக்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.

நிறைவாக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு நன்றி யுரையாற்றினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *