இவர்கள் மனிதர்கள்தானா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கோழி பிரியாணி வழங்கக்கூடாதா?

2 Min Read

பருக்காபாத், ஆக.19  வெள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோழி  பிரியாணி வழங்கியதாக ஊராட்சி மன்றத் தலைவர் முகமது சமி  மற்றும் அவரது  மகன் மீது  ஹிந்து அமைப்புகள் புகார் கூறியதால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய உத்தரப் பிரதேசம் முழுவதும் கடுமையான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது, பருக்காபாத் மாவட்டத்தில் உள்ள ரதேகா என்ற கிராமம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து கிராம மக்கள் அங்குள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு சாப்பிடுவதற்கு சுடச்சுட கோழி பிரியாணி விநியோகிக்கப்பட்டது.

இது தொடர்பாக அப்பகுதி ஹிந்து அமைப்பினர்களுக்குத் தகவல் தெரியவே, ஹிந்துக்களின் மத உணர்விற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஹிந்துக்களுக்கு  புலால் உணவைக் கொடுத்து சாப்பிட வற்புறுத்தியதாகக் கூறி, அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து இரு பிரிவினருக்கும் இடையே மத மோதலைத் தூண்டுதல் மற்றும் மத உணர்வைப் புண்படுத்துதல் என்ற பிரிவுகளின் கீழ் ஊராட்சி மன்றத் தலைவர் முகமது சமி மற்றும் அவரது மகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, இதில் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விக்னம் தீர்ப்பவனா, விநாயகன்?

விநாயகன் சிலை ஊர்வலம் மின்சாரம் தாக்கி மூன்று பேர் பரிதாப மரணம்!

 அய்தராபாத், ஆக.19 விநாயகர் சதுர்த்திக்காகத் தயாரான சிலையை, அய்தராபாத் லக்ஷ்மி நகர் பகுதியில் இருந்து டிராக்டரில் கொண்டு செல்லும் போது, உயர் மின்னழுத்த கம்பியுடன் சிலை உரசியது. இந்த விபத்தில் மூன்று  இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் இருவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் டோனி (வயது 21) மற்றும் விகாஸ் (வயது 20) என இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது கடந்த  இரண்டு நாள்களில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவமாகும்.

இந்த விபத்து தொடர்பாகக் காவல்துறை அதிகாரி ராம் மோகன் கூறும்போது, ‘‘சிலை 23 அடி உயரம் இருந்தது, சிலை சாய்ந்துவிடாமல் இருக்க மூன்று இளைஞர்கள் சிலையைச் சுற்றி இரும்புக் கம்பிகளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு வந்தனர்.  இந்த நிலையில் சிலையின் தலைப்பாகம் உயரழுத்த மின்சாரக் கம்பியில் உரசியதால், மூன்று இளைஞர்கள் மீது மின்சாரம் பாய்ந்து  உயிரிழந்தனர்’’ என்றார்.

முன்னதாக, அம்பர்பேட்  என்ற பகுதியில் நடந்த ஊர்வலத்தில் சிலையின்மீது மின்சராக் கம்பி பட்டவுடன், அதை அகற்ற இரும்பு கம்பியைக் கொண்டு மின்சார வயரை தூக்க முயன்ற போது, மின்சாரம் தாக்கி,  ராம் சரண் என்பவர்  உயிரிழந்தார்.  இதே போல் கிருஷ்ணாஷ்டமி  விழா வில்  கத்தி வாள் போன்றவற்றை தூக்கிக்கொண்டு சென்றவர்கள் மின்சாரம் தாக்கி ஆறு பேர் உயிரிழந்தனர்
12 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *