கீழப்பாலையூர், ஆக. 19- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் கீழப்பாலையூர் க.வீரையன் இல்லத்தில் குடவாசல் ஒன்றிய தலைவர் நா.ஜெயராமன் தலைமையிலும் மற்றும் மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக ஒன்றிய துணை தலைவர் சி.அம் பேத்கர் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த் தினார்.
கூட்டத்தின் நோக் கத்தை விளக்கி மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன் உரை நிகழ்த்தினார் மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, மாவட்ட விவசாய தொழி லாளரணி செயலாளர் க.வீரையன், ஒன்றிய தலைவர் நா.ஜெயராமன், ஒன்றிய செயலாளர் க. அசோக்ராஜ், ஆகியோரின் உரைக்கு பின் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உரை நிகழ்த் தினார்கள்.
மஞ்சக்குடியில் அமைய உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலையை வரும் அக்டோபர் மாதத்திற்குள் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.
சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத் திற்கு குடவாசல் ஒன்றியத் தின் சார்பில் பெருமளவில் நிதி பெற்றுத் தருவது என முடிவு செய்யப்பட்டது.
விடுதலை சந்தாவை கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் விடுதலை சந்தா பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மறை மலைநகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு கழக தோழர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
வரும் செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர் களின் பிறந்தநாளன்று கழக குடும்பங்களில் கொடியேற்றி சிறப்பித்து கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.
நிகழ்வில் ஒன்றிய தலைவர் நா .ஜெயராமன், கீழப்பாலையூர் கிளை கழக தலைவர் வி.பாக்யராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, ஒன்றிய செயலாளர் க.அசோக் ராஜ், குடவாசல் ஒன்றிய இளைஞரணி தலைவர் செ.ரவிக்குமார், மாவட்ட மாணவர் கழக செயலாளர் அ.அறி வுச்சுடர், ஒன்றிய தொழிலாளரணி.நா.செல்வக்குமார், நடராஜன், சி அன்புச் செழியன், வீரம்மாள், அமிர்தம், பட்டு, செம் பொன், அஞ்சம்மாள் சித்ரா, ஜெயராணி, நீலா வதி, மருதையன் ஈவெரா.அசோக் மணி, அமிர்தம் காத்தையன், பீம்சிங், கலியமூர்த்தி, மருதன் ராமதாஸ், தங்கராசு, வில்லையன் மற்றும் மஞ்சகுடி, அன்னவாசல், கீழப்பாளையூர் கழகத் தோழர்கள் மற்றும் மகளிரணி, இளைஞரணி தோழர்கள் கலந்து கொண் டார்கள்.