நாட்டில் அவசரநிலையைவிட மோசமான சூழல் நிலவுகிறது

பாட்னா, ஆக. 18 நாட்டில் அவசர நிலையைவிட மோசமான சூழல் நிலவுகிறது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பீகாா் மேனாள் முதல மைச்சருமான லாலு பிரசாத் தெரிவித்தாா்.

பீகாரில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நடத்திய வாக்குரிமை நடைப் பயணத்தில் பங்கேற்கச் சென்றபோது பாட்னாவில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

நாட்டில் இப்போது நிலவி வரும் மோசமான சூழ்நி லைக்கு எதிராக நாம் போராடி வருகிறோம். முன்பு அவசரநிலை காலகட்டத்தில் நாட்டில் மிக மோசமான சூழ்நிலை நிலவியது. இப்போதைய நிலைமை அதைவிடவும் மோசமாக உள்ளது. இந்த நேரத்தில் ராகுல் காந்தியும் நம்முடன் இணைந்து போராடுவது நல்ல விசயம்.

நாட்டின் ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும் காக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். வாக்குரிமை என்பது அரசியல மைப்புச் சட்டம் நமக்கு அளித்த மிகவும் முக்கியமான உரிமை.

அந்த உரிமையை நம்மிடம் இருந்து பறிக்க பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முயலு கின்றன. அது நிகழ்ந்துவிடாமல் நாம் தடுத்தாக வேண்டும் என்றாா்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *