அய்தராபாத், ஆக.18 தெலங்கானா மாநிலம் உப்பல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமந்தபூர், கோகுலே நகரில் நடைபெற்ற கிருஷ்ணர் ஊர்வலத்தில் வாள்களை ஆட்டிச்சென்ற போது மின்சாரக் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் கிருஷ்ண பொம்மையை வைத்து ஊர்வலம் செல்வார்கள். ஊர்வலத்தில் புதிதாக வாள் மற்றும் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு செல்லும் கூத்து தற்போது கிருஷ்ண ஜெயந்திக்கும் பரவி விட்டது. பொதுவாக ராம நவமி, அனுமான் ஜெயந்தி போன்ற ஊர்வலங்களில் வாள், கம்பி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு செல்வார்கள். தற்போது ஹிந்து அமைப்புகள் எல்லா ஊர்வலங்களிலும் வாள் கம்பி உள்ளிட்ட ஆயு தங்களைக் கொண்டு செல்ல அனைவருக்கும் அந்த ஆயு தங்களை விநியோகித்து வரு கின்றன.
தெலங்கானா மாநிலத்தில் உப்பல் பகுதியில் இதே போன்று ரதத்தின் மீது ஏறி நின்று வாளை சுழற்றிக்கொண்டு வந்த போது, ரதத்தை எடுத்துச் சென்ற வாகனம் திடீரென நின்றுவிட்டது. அப்போது, பத்து பேர் ரதத்தை தள்ளிக் கொண்டிருந்தபோது, ஒரு மேட்டின் மீது ரதத்தை தூக்கியபோது, வாள் வைத்தி ருந்தவர்கள் மீது, மின் கம்பிகள் உரசின; இதனால் ரதத்திலும் மின்சாரம் பாய்ந்தது.
மின்சாரம் தாக்கியதால் நிகழ்விடத்திலேயே 5 பேர் உயி ரிழந்தனர். 12 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த வர்களின் உடல்களை உள்ளூர் மேட்ரிக்ஸ் மருத்துவமனையில் இருந்து காந்தி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்த வர்களில் ஒருவர் மேட்ரிக்ஸ் மருத்துவமனையிலும், மற்றொருவர் நாம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மற்ற இருவர் உள்ளூரிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.