திருப்பத்தூர், ஆக.17- திருப்பத்தூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்து ரையாடல் கூட்டம் 15.08.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் மாவட்ட கழக அலுவலகம் திருப்பத்தூரில் நடை பெற்றது.
இக் கூட்டம் சி.சுரேஷ் குமார் (மாவட்டத் தலை வர் இளைஞரணி) தலைமையிலும், எம்.நித்தியானந்தம் (மாவட்டச் செயலாளர் இளைஞரணி) வரவேற்பிலும் நடை பெற்றது.
மாவட்டச் செயலாளர் பெ.கலைவாணன் இக் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.
இக் கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன், மாநில இளை ஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, பகுத்தறி வாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாநில மகளிரணி பொருளாளர் எ.அகிலா ஆகியோர் மாவட்ட ஒன்றியங்கள், கிளைகள் தோறும் இளைஞரணியை பலப்படுத்த வேண்டும்.இளைஞர்கள் இயக்கத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், எந்தெந்த விதங்களில் தந்தை பெரியார் கொள்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதை குறித்து சிறப்புரை யாற்றினார்கள்.
இக்கூட்டதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்களை இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கா.நிரஜ்சன் வாசித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசனின் மைத்துனரும், மாநில மகளிரணி பொருளாளர் எ.அகிலாவின் சகோதரருமான டி.சிறீதர் மறைவுற்றார்.
சோலையார்பேட்டை சுயமரியாதைச் சுடரொளி கே.கே.சின்னராசு அவர் களின் அண்ணன் மகன் கே.ஏ.தமிழ்ச் செல்வன் 76 ஆம் வயதில் காலமானார். இருவரின் மறைவுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரி விக்கப்பட்டது.
அக்டோபர் 4இல் செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறும் சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் பெருந்திரளாக பங்கேற்பது.
இம் மாநாடு குறித்த விளக்க பொதுக் கூட் டம் ஆகஸ்ட் 21, 24இல் சிறப் பாக நடத்தி முடிப்பது.
திருச்சி சிறுகனூரில் நிறுவப்படவுள்ள பெரியார் உலகிற்கு ஏற்கனவே பலமுறை மாவட்ட தலைவர் தலைமையில் நிதி வழங்கபட்டுள்ளது, மேலும் பெரும் நிதியை மாவட்டம் சார்பில் திரட்டி தருவது.
முடிவடைந்த விடுதலை சந்தாக்களை, மிக விரைவாக சந்தாதா ரர்களை சந்தித்து, சந்தாக் களை புதுப்பிப்பது.
சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்), தங்க அசோகன் (மாவட்ட காப்பாளர்), ஏ.டி.ஜி.சித்தார்த்தன் (மாவட்ட துணைச் செயலாளர்), காளிதாஸ் (நகரத் தலைவர்), மாவட்டத் தலைவர் மகளிரணி இரா.கற்பகவள்ளி, நா.சுப்புலட்சுமி, வே.அன்பு (மாவட்டத் தலைவர், ப.க.), பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்), இரா.நாகராசன் (கந்திலி ஒன்றியச் செயலாளர்), இராஜேந்திரன் (சோலையார்பேட்டை அமைப்பாளர்), கோ.திருப்பதி (மாவட்டச் செயலாளர்), சரவணன் (ஒன்றிய தலைவர், லக்கிணாக்கன்பட்டி), சீனி (பகுத்தறிவாளர் கழகம்), பச்சைமுத்து (ஏலகிரி பொறுப்பாளர்), க.இனியவன் (மாணவ ரணி), க.உதயவன் ஆகி யோர் பங்கேற்றனர்.
மோ.வசீகரன் (மாவட்ட தலைவர், மாண வர் கழகம்) நன்றியுரை ஆற்றினார்.