இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் வளர்ச்சியை விடதமிழ்நாடு அரசின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிகார பகிர்வில் மாநிலங்களின் பங்கு குறைந்து வருவதாகவும், ஓன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலத்தின் நிதியை கூட போராடி வாங்க வேண்டியுள்ளதாகவும் சாடியுள்ளார்.