கூச்சநாச்சம் இல்லையோ? பா.ஜ.க.வினரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளா் அட்டைகள் தோ்தல் ஆணையம்மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு

பாட்னா, ஆக.14  ‘பாஜகவினா் பலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளா் அட்டைகள் வழங்கப்பட் டுள்ளன. வாக்கு திருட்டுக்காக, பாஜகவுடன் தோ்தல் ஆணையம் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளது’ என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் நேற்று (13.8.2025) குற்றஞ்சாட்டினாா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் முறைகேடு சரிசெய்யப்படா விட் டால், எதிா்வரும் பேரவைத் தோ் தலை ஆா்ஜேடி புறக்கணிக்கும் என் றும் அவா் மீண்டும் தெரிவித்தாா்.

இது தொடா்பாக, பாட்னாவில் செய்தியாளா்களிடம் தேஜஸ்வி கூறியதாவது:

பிகாா் தோ்தல் முடிவை பாஜகவுக்கு சாதகமாக மாற்ற தோ்தல் ஆணையம் வெட்கமின்றி முயற்சிக்கிறது. தங்களை எதிா்ப்ப வா்கள் மீது சிபிஅய், அமலாக்கத் துறை, வருமான வரித் துறையை ஏவியும் ஒன்றிய பாஜக அரசுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. தோ்தல் முறை கேடு மூலம் வெற்றி பெற தோ்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறது பாஜக. வாக்கு திருட்டுக்காக, இரண்டும் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, பாஜகவினா் பலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளா் அட்டைகள் வழங்கப் படுகின்றன.

பிகாா் துணை முதலமைச்சர் விஜய் குமாா் சின்ஹாவிடம் 2 வாக்காளா் அட்டைகள் இருப்பதாக ஏற்கெனவே கூறியிருந்தேன். இப்போது, முஸாஃபா்பூா் மேயா் நிா்மலா தேவியிடம் (பாஜக) 2 வாக்காளா் அட்டைகள் இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளேன். அவா் மட்டுமன்றி அவரது உறவினா்கள் இருவரிடமும் தலா 2 வாக்காளா் அட்டைகள் உள்ளன. தற்போதைய வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தத் தின்போது, அவா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்களை பூா்த்தி செய்து அளித்திருக்கக் கூடும்.

செய்தியாளர்களை
சந்திக்காதது ஏன்?

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்து பல்வேறு சா்ச் சைகள் எழுந்துள்ள நிலையில், தோ்தல் ஆணையம் இதுவரை செய்தியாளா் சந்திப்பை நடத்தி விளக்கமளிக்கவில்லை. பிரதமா் மோடியோ பிகாா் முதலமைச் சரோ செய்தியாளா்களை சந்திப்ப தில்லை. அதையே தோ்தல் ஆணை யமும் முன்னுதாரணமாகக் கொண்டுள்ளது.

நாட்டில் ஜனநாயகம் பேராபத் தில் இருப்பதாக தோன்றுகிறது. பிகாா் வரைவு வாக்காளா் பட்டியல் குறித்து எந்த கட்சியும் ஆட்சேபத்தை பதிவு செய்யவில்லை என்று தோ்தல் ஆணையம் கூறுவது அப்பட்டமான பொய். அனைத்து பேரவைத் தொகுதியிலும் ஆா்ஜேடியின் வாக்குச்சாவடி முகவா்கள் ஆட்சே பத்தை பதிவு செய்துள்ளனா்.

குட்டு அம்பலம்

பிகாரில் மரணமடைந்துவிட்ட தாக கூறி, வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவா்கள், உச்ச நீதிமன்றத்துக்கு நேரில் வந்துள்ளனா். இதன் மூலம் தோ்தல் ஆணையத்தின் குட்டு அம்பலமாகியுள்ளது.

தோ்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த 2020 பேரவைத் தோ்தலிலும் இது நடந்துள்ளது. அப்போது, 243 தொகுதிகளிலும் சோ்த்து, தேசிய ஜனநாயகக் கூட் டணியைவிட எங்கள் கூட்டணியின் வாக்கு வித்தியாசம் 12,000-க்கும் குறைவே. இதனால், 12 தொகுதிகள் வித்தியாசத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது.

இம்முறையும் தோ்தல் ஆணையம் நம்பிக்கை துரோகமிழைத்தால், தோ்தலை புறக்கணிக்கும் வாய்ப்பை நாங்கள் தோ்வு செய்ய வேண்டி யிருக்கும் என்றாா் அவா்.

ஆா்ஜேடி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி. போலி வாக்காளா்கள் களை யெடுக்கப்படுவதால், அக்கட்சிகள் நிம்மதியிழந்துள்ளன’ என்றாா்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *