தஞ்சை, ஆக. 13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குழு (Anti-Drug Awareness) ஏற்படுத்தப்பட்டு போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி 11.8.2025 அன்று மாணவர்களிடையே உறுதிமொழி நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்ற காணொலிக் காட்சி நிகழ்வில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கே.பி.வௌ;ளியங்கிரி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் அனைவரும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.