கோவை, ஆக. 13- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 10-08-2025 அன்று மாலை 6 மணி அளவில் கோவை ராசா முத்தையா நகர் தமிழ் முரசு இல்லத்தில் நடைபெற்றது.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்தும், பெரியார் உலகம் நிதி திரட்டுதல், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது, விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்குதல், செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத் துடன் பங்கேற்பது, இளைஞரணி சார்பில் துண்டறிக்கை விநியோகம், பெரியார் சமூக காப்பு அணியில் இளைஞர்கள் மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்வது, ஆசிரியர் அவர்களின் அளப்பரிய உழைப்பால் கிடைத்திட்ட பலன்கள் குரித்து கூட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்,.
மாவட்ட தலைவர் ம. சந்திர சேகர், மாவட்ட செயலாளர் ஆ.பிர பாகரன், பழ.அன்பரசு ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.
கோவை மாநகர செயலாளர் புளியகுளம் க.வீரமணி, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அக்ரி நாகராஜன், குறிச்சி பகுதி தலைவர் குமரேசன், பீளமேடு பகுதி செயலாளர் ரமேஷ் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா, சிவக்குமார், ஆடிட்டர் ஆனந்தராஜ், அ.மு. ராஜா, பகுதி தலைவர் ஆட்டோ சக்தி, பெயிண்டர் குமார், குருவாயூரப்பன் ,ஆவின் சுப்பையா, மகளிர் அணி தோழர்கள் திலகமணி, சந்திரகலா ,பெரியார் திருமண நிலைய அமைப்பாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் கருத்துரையாற்றினர்.
மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியிலும் கழக தோழர்கள் அனை வரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம்” என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நிதித் திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை (செப் – 17 சமூக நீதி நாள்) மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில், கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் திராவிடர்களின் திருநாளாக கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் – மறைமலைநகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு – மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி நகரமெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
செப்டம்பர் 6,7 கோபிசெட்டி பாளையத்தில் நடைபெறும் பெரியார் சமூக காப்பு அணி பயிற்சியில் மாவட்டத்திலிருந்து இளைஞர்கள் மாணவர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது
ஆகஸ்ட் 18 தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு – மறைமலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு விளக்க பரப்புரை கூட்டத்தை கோவையில் மிக சிறப்பாக நடத்துவது என தீர்மானிக் கப்பட்டது.