ஜெயங்கொண்டம், ஆக. 13- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் உடையார்பாளையம் கடைவீதியில் எதிர்வரும் அக்டோபர் 4ஆம் தேதி செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்க பரப்புரை கூட்டம் 10.8.2025 அன்று மாலை 6 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் இரத்தின.ராமச்சந்திரன் தலைமை யேற்க, ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயராமன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.ராஜா, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் க.மணி கண்டன், மாவட்டத் துணைச் செயலாளர் க.கார்த்திக், மாவட்ட துணைச் செயலாளர் பொன். செந்தில்குமார், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றியதை தொடர்ந்து கழகப் பேச்சாளர் தி. என்னாரெசு பிராட்லா சுயமரியாதை இயக்கத்தின் சிறப்புகள் குறித்தும், திராவிடர் கழகம் சமூகநீதி தொடர்பாக ஆற்றிய செயல்பாடுகள் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன் நன்றி கூறினார். ராதிகா-செந்தில்குமார் இணையர்களின் மழலைகள் யாழ் இனியன், யாழ் வேந்தன் ஆகியோர் ஓராண்டு பெரியார் பிஞ்சு சந்தாவிற்கான தொகையினை பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா விடம் வழங்கினர்.
பங்கேற்றோர்
மாவட்டக் காப்பாளர்
சி. காமராஜ், மாநில ப.க. அமைப்பாளர் தங்க சிவமூர்த்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் மா.சங்கர், மாவட்ட தொழிலாளரணி தலைவர் வெ.இளவரசன், செந்துறை ஒன்றிய தலைவர் மு.முத்தமிழ்செல்வன், செயலாளர் ராசா. செல்வகுமார், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன் ஒன்றிய செயலாளர் தியாக.முருகன், அரியலூர் ஒன்றிய செயலாளர் த.செந்தில், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.ராதிகா, மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர் வி.சிவசக்தி, பரணம் ராமதாஸ், பொன்பரப்பி சுந்தரவடிவேல், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் கே.எம்.சேகர், ஒன்றிய அமைப்பாளர் சி.தமிழ் சேகரன், ராஜன்,உள்ளிட்ட ஏராளமான பொறுப்பாளர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்றனர்.