ஆதார் அட்டைக்கு மரியாதை இவ்வளவுதானா? இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க முடியாது – சொல்கிறது உச்சநீதிமன்றம்

3 Min Read

புதுடில்லி, ஆக. 13- ஆதார் அட்டை, குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையம் நிலைப்பாடு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங் குவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்தது. 2003ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க் கப்பட்டவர்கள், தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோஜ் ஜா, மகுவா மொய்த்ரா, கே.சி.வேணுகோபால், சுப்ரியா சுலே மற்றும் இந்திய கம்யூ னிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமைக்கான ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளுமாறு கடந்த மாதம் 10ஆம் தேதி உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. அதிக வாக்காளர்கள் நீக்கப் பட்டால் நாங்கள் தலையிடுவோம் என்று கடந்த 29ஆம் தேதி கூறியது. இதற்கிடையே, கடந்த 1ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேர் நீக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (12.8.2025) இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, மனோஜ் ஜா நாடாளுமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கபில் சிபலை பார்த்து நீதிபதிகள் கூறியதாவது:-

பீகாரில் ஒரு கோடி வாக்காளர் களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்று கூறுகிறீர்கள். ஆனால், மொத்த வாக்காளர்கள் 7 கோடியே 90 லட்சம் பேரில், 7 கோடியே 24 லட்சம் பேர், சிறப்பு திருத்தப்பணியை ஏற்று ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர். இதன்மூலம், ஒரு கோடி பேர் நீக்கம், அவர்களின் வாக்குரிமை பறிப்பு என்ற வாதங் கள் நொறுக்கப்பட்டுள்ளன.

7 கோடியே 90 லட்சம் மொத்த வாக்காளர்களில், 6 கோடியே 50 லட்சம் வாக்காளர்களின் பெயர் களோ அல்லது அவர்களின் பெற் றோர் பெயர்களோ, 2003ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலிலேயே இருந்துள்ளன. அதனால் அவர்கள் எந்த ஆவணமும் சமர்ப்பிக்கவேண்டாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, இந்த வாதம் அனைத்தும் நம்பிக்கை குறைவால் ஏற்பட்டதை தவிர வேறில்லை. மேலும், சிறப்பு திருத்தப்பணிக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமைக்கான முடிவான ஆவணங்களாக ஏற்க முடியாது என்றும், கூடுதலாக சில ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் எடுத்த நிலைப்பாடு சரியானதுதான். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

சான்றிதழ் பெற திணறல்

மூத்த வக்கில் கபில் சிபல், “மக்கள் ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வைத்திருந்தும், அவற்றை அதிகாரிகள் ஏற்க மறுக்கிறார்கள்” என்று கூறினார்.

அதற்கு நீதிபதிகள், “எந்த ஆவணங்களும் இல்லாமல் பீகாரில் இருந்தால், வாக்காளராக கருத வேண்டும் என்பது உங்கள் வாதமா? வேறு சில ஆவணங்களை காட்டினால் ஏற்றுக்கொள்ளலாம்” என்று கூறினர்.

கபில் சிபல் கூறுகையில் “பிறப்பு சான்றிதழையும் பெற்றோரின் இதர ஆவணங்களையும் பெற பொதுமக்கள் திணறுகிறார்கள்” என் றார்.

சரிசெய்யலாம்

அதற்கு நீதிபதிகள், “பீகாரில் யாரிடமும் ஆவணங்கள் இல்லை என்று ஒட்டுமொத்தமாக சொல்வதுபோல் இருக்கிறது. பீகாரில் இந்த நிலை என்றால் மற்ற பகுதிகளில் என்ன நடக்கும்? என்று கேட்டனர். கபில் சிபல், “ஒரு தொகுதியில், இறந்ததாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 12பேர் உயிருடன் உள்ளனர்” என்று கூறினார்.

ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவிவேதி, வரைவு பணியின்போது ஆங்காங்கே சிறு தவறுகள் நடப்பது இயல்புதான். இது வரைவு வாக்காளர் பட்டியல்தான். எனவே, இறந்தவர்களாக அறிவிக்கப்பட்டு உயிருடன் இருப்பவர்கள், பிழையை சரிசெய்து கொள்ளலாம்” என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *