பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித சலுகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும் வழங்கப்படுமா? டி.ஆர்.பாலு எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடில்லி, ஆக. 13-  2019 முதல் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவின ருக்கு ஒன்றிய அரசு  10 சதவீத இட ஒதுக்கீடு சலுகை வழங்கி வருகிறது. ஆனால், இந்த சலுகை  பட்டியல் இன மற்றும் பழங்குடி சமுதாய மக்களுக்கு வழங்கப் படுவதில்லை.

அதைப் போலவே,  இந்த சலுகை இதரபிற்பட்ட சமுதாய மக்களும் இந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் சேர்க்க படவில்லை.  இவர்களுக்கு ஜாதி அடிப்படையில் சமுதாய ரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கியவர்கள் என்ற காரணத்தால் மட்டுமே இட ஒதுக்கீடு சலுகை வழங்க அரசியல் சட்டம் வழிசெய்கிறது. ஆனால், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை 2019 முதல் ஒன்றிய அரசு அளித்து வருகிறது. இதற்கான அரசியல் சட்ட திருத்தத்தையும் ஒன்றிய பாஜக அரசு செய்தது.

இந்நிலையில்,  இந்த பொருளாதார ரீதியான அடிப்படையில் வழங்கப் படும் 10 சதவீத சலுகையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய, பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர், இதரபிற்படுத்தப் பட்ட ஜாதியினர் உள்ளிட்ட அனைத்து சமுதாய பிரிவினவருக்கும் வழங்க பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில்,  இந்த கோரிக்கை தொடர்பான கேள்வி ஒன்றை நாடாளு மன்றத்தில்  மக்களவை திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பினார்.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்படும் சலுகை யில் பட்டியல் ஜாதி, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவினரும் சேர்க்கப்பட வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை அரசு அறிந்துள்ளதா?  அப்படியானால் அதன் மீதான அரசின் முடிவின் விவரம் என்ன?  அரசு இது தொடர்பான கோரிக் கையை ஏற்கவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? மேலும்,  பொருளாதார அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ள 10 சதவீத இட ஒதுக் கீட்டு சலுகையின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுப வர்களின் தேர்வு மதிப் பெண் பட்டியல் ஜாதி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட தேர்வர் களைவிடவும் கணிசமாகக் குறைவானதாக பல அரசு நியமனங்களில் உள்ளதா? அப்படியென்றால் இந்த நிலையை சரி செய்ய ஒன்றிய அரசினால் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்? என்று பல்வேறு விஷயங் கள் குறித்து  தனது கேள் வியில் டி.ஆர்.பாலு எம்.பி. எழுப்பி இருந்தார்.

இந்த கேள்விக்கு ஒன் றிய சமூகநீதி மற்றும் அதி காரமளித்தல் துறையின் இணை அமைச்சர்   பி.எல். வர்மா நேற்று (12.8.2025) மக்களவையில் பதிலளித்தார்.

அரசிடம்  தரவுகள் இல்லை.

”  2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அரசி யலமைப்பு சட்டத்தின் 103 ஆவது திருத்தத்தின் அடிப்படையில் பொருளா தார ரீதியாக நலிவடைந்த பிரிவை சேர்ந்தவர் களுக்கு அரசுசார் நிய மனங்களிலும்  கல்வி நிலையங்களிலும் 10 சதவீதம் அளவு வரை இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இதனை நடை முறைப்படுத்துவதில் அரசு உறுதிபூண்டுள்ளது. பொருதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் ( இ .டபுள்யூ.எஸ்) நியமனங்கள் தொடர் பான புள்ளி விவரங்கள் துறைவசம் இல்லை ”

இவ்வாறு அமைச்சர் வர்மா தனது பதிலில்  தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *