மும்பை, ஆக.12 மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஹெத் வட்டத்தில் மலைப்பகுதியில் கொஹிடி கிராமத்தில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் (சிவன் கோவில்) என்ற இந்து மத கோவில் உள்ளது.
ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி
இந்த கோவிலுக்கு புனேவின் பபல்வாடி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் 37 பேர் நேற்று (11.8.2025) மாலை லாரியில் சென்றுள்ளனர். இந்நிலை யில், மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தீவிர சிகிச்சை
இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த 8 பெண் பக்தர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 29 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனை யில் அனுமதித்தனர். படுகாயமடைந்த வர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, மராட்டிய முதலமைச்சர் பட்னாவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நிவாரண நிதி!
அதேவேளை, விபத்தில் உயிரி ழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அதேபோல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மராட்டிய முதலமைச்சர் பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.