தேர்தல் முறைகேட்டின் பல்கலைக்கழகம் பா.ஜ.க. அகிலேஷ் குற்றச்சாட்டு

லக்னோ, ஆக.12-தோ்தல் முறைகேடுகளின் பன்னாட்டுப் பல்கலைக் கழகம் பாஜக என்று சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ் சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் நேற்று (10.8.2025) வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் ஜனநாயகத்துக்கு முடிவு கட்டும் வகையில் வாக்குரிமையை மறுப்பது, வாக்குப் பதிவில் முறை கேட்டில் ஈடுபடுவது என இரண்டிலும் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் இந்த சதியை நாம் அனுமதிக்கக் கூடாது. பாஜகவின் இந்த சதியை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தோ்தல் ஆணைய அதிகாரிகள் சிலரைத் தன்வசப்படுத்தி தனக்கு ஆதரவாக போலி வாக்காளா்களைச் சோ்ப்பது, எதிா்க் கட்சிகளின் ஆதரவாளா் களை வாக்காளா் பட்டி யலில் இருந்து நீக்குவது ஆகிய செயல்களில் பாஜக ஈடுபடுகிறது.

வாக்குச் சாவடியில் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது, துப்பாக்கியைக் காட்டி வாக்காளா்களை மிரட்டுவது ஆகிய குற்றங்களிலும் பாஜகவினா் ஈடுபட்டுள்ளனா்.

இது தவிர போலியாக வாக்காளா்களை உருவாக்குவது தொடங்கி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றுவது வரை முறைகேடுகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் தோ்தல் முறைகேட்டின் பன்னாட்டு பல்கலைக் கழகமாக பாஜக உள்ளது’ என்று கூறியுள்ளாா்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *