செய்திச் சுருக்கம்

1 Min Read

நீதியில் கருநாடகா – சிறையில் தமிழ்நாடு

நாட்டில் நீதி வழங்குவதில் கருநாடகா முதலிடத்தையும், சிறைத்துறையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு முதலிடத்தையும் பிடித்துள்ளன. 18 மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வை இந்திய நீதி அறிக்கை (IJR) வெளியிட்டுள்ளது. நீதி, காவல், சிறை, சட்ட சேவைகள் ஆகியவற்றில் ஒன்றிய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு, மனிதவளம், வேலை பளு, கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இனி முன் இருப்பு ரூ.50,000… அதிர்ச்சி கொடுத்த ICICI

புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு ICICI அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச மாதாந்தர இருப்புத் தொகையை (Avg.Minimum Balance) நகர்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50,000, சிறு நகரங்களுக்கு ரூ.25,000, கிராமப்புற பகுதிகளுக்கு ரூ.10,000 ஆக உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை ஆக.1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், ஏற்கெனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய முன் இருப்பே தொடரும்.

டிரம்ப் வரியால் அமெரிக்கர்கள் கதறல்

Make America Great Again என அமெரிக்காவை மகத்துவமாக்குவோம் என கூறி பல்வேறு நாடுகளுக்கு டிரம்ப் வரிவிதித்துள்ளார். இதனால், அமெரிக்காவில் அத்தியாவசிய பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் அமெரிக்கர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பான காட்சிப் பதிவுகளும் வைரலாகி வருகின்றன. பல பொருள்களின் விலையும் 1 டாலரில் இருந்து 10 டாலராக உயர்ந்துவிட்டதாக பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *