ஜெயங்கொண்டம், ஆக. 9- ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் 5. 8 .2025 மற்றும் 6.8.2025 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.
அதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 110 தடை தாண்டும் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டு எறிதல், வட்ட எறிதல், 4X100 மீட்டர் தொடரோட்டம் ,மற்றும் 4 X 400 தொடரோட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் 25 பள்ளிகளில் இருந்து சுமார் 550 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாண வர்கள் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் என்.விஜய் 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், எஸ். துளசி மணி 1500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும் மற்றும் கோலுண்றி தாண்டுதல் இரண்டாம் இடமும், வி. ராகுல் கோலூன்றி தாண்டுதல் மூன்றாம் இடமும், வி. வருண்பிரசாத் குண்டு எறிதல் இரண்டாம் இடமும், 19 வயதுக் குட்பட்ட பிரிவில் சூரிய பிரகாஷ் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடமும், மற்றும் 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், கே.சிவசாமிநாதன் 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும், மற்றும் வட்டு எறிதல் மூன்றாம் இடமும், கோலூன்றி தாண்டுதல் மணிஷ்குமார் முதலிடமும், அகிலன் இரண்டாம் இடமும், மற்றும் 4x 100 மீட்டர் தொடர் ஓட்டம் சூரிய பிரகாஷ், மனிஷ் குமார், சிவசாமிநாதன் மற்றும் அகிலன் ஆகியோர் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.
அதில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களையும் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ், ஆர்.ரவிசங்கர் மற்றும் ஆர்.ரஞ்சனி ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.