மும்பை, ஆக.8- மும்பையை சேர்ந்த வழக்குரைஞர் ஆர்த்தி சாத்தேவை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரைத்தது. இதன்படி அவர் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கடந்த ஆண்டு ஜனவரி வரை மராட் டிய மாநில பா.ஜனதா செய்தித் தொடர்பாளராக இருந்தார். இந்த நிலையில் மும்பை உயர் நீதிமன்றம் நீதிபதியாக ஆர்த்தி சாத்தே நியமிக்கப்பட்டதற்கு எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சி மூத்த தலைவர் ரோகித்பவார் கூறுகை யில், “பொதுமேடைகளில் ஓர் அரசியல் கட்சியில் வெளிப் படையாக செயல்பட்ட ஒருவரை நீதிபதியாக நியமிப்பது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடிகளில் ஒன்றாகும். இது இந்திய நீதித்துறையின் பாரபட்சமற்ற தன்மையை மோசமாக பாதிக்கும்” என்றார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஹர்ஷ்வர்தன் சப்கால் கூறுகையில், “தீவிர அரசியலில் இருந்த ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டால், அவரால் எப்படி பாரபட்சமற்ற தீர்ப்பு வழங்க முடியும். 2014 முதல் ஜனநாயகம் மற்றும் அரசிய லமைப்பு ஓரங்கட்டப்பட்டு உள்ளன. அனைத்து தன் னாட்சி அமைப்புகளும் அரசின் உத்தரவுகளின் கீழ் செயல்படு கின்றன” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆர்த்தி சாத்தே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “நான் பா.ஜனதா செய்திதொடர்பாளராக இருந்தது உண்மைதான். ஆனால் அந்த பதவியிலிருந்து முன்பே விலகி விட்டேன். நீண்ட நாட்களுக்கு முன்பே கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகி விட்டேன். எனவே இது முடிந்து போன பிரச்சினை. இதற்கு மேல் நான் பதிலளிக்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.