புதுடில்லி, ஆக.7 அரசு நிறுவனங்களின் உயா் மட்ட பதவிகளில் எஸ்சி, எஸ்டி, சிறு பான்மையினா் மற்றும் பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள் ளார். நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் அளித்த பதிலின் அடிப்படையில் இந்தத் தகவலை அவா் வெளி யிட்டுள்ளார்.
- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்: மொத்தமுள்ள 9 தலைவர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர்களில் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் ஒருவர்கூட இல்லை.
- இயக்குநரவை: 98 இயக்குநர்க ளில் எஸ்சி – 6 பேர், எஸ்டி – 1, சிறு பான்மையினர் – 1, பெண்கள் – 12 பேர் மட்டுமே உள்ளனா்.
- எல்.ஐ.சி: மொத்தமுள்ள 13 இயக்குநர்களில் எஸ்சி, சிறுபான்மையி னர் எவரும் இல்லை. எஸ்டி – 1, பெண் – 1 மட்டுமே. தலைவரிலும் இந்தப் பிரிவினா் இல்லை.
- அரசு பொதுக் காப்பீட்டு நிறு வனங்கள்:
- இயக்குநரவை: 48 இயக்கு நர்களில் எஸ்சி – 5 பேர், சிறுபான்மை யினர் மற்றும் எஸ்டி எவரும் இல்லை. பெண்கள் – 18 பேர்.
- தலைமை நிர்வாகிகள்: 6 பேரில் எஸ்சி – 1, சிறுபான்மையினர் மற்றும் எஸ்டி எவரும் இல்லை. பெண்கள் – 3 பேர்.
ஒன்றிய அமைச்சரின் பதில் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல, அது ஜாதி பாகுபாட்டின் வெளிப்பாடு என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார். இடஒதுக்கீடு இல்லாத பதவிகளில் இந்தப் பிரிவினா் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப்படுகின்றனா் என்பதற்கு இது சான்றாக உள்ளது என்றும் அவா் தெரிவித்தார். அரசு நிறுவனங்களின் நிலையே இப்படி இருந்தால், தனியார் நிறுவனங்களின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் என்றும் சு.வெங்கடேசன் கவலை தெரிவித்துள்ளார்.