14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சிப் பதிவு ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை

3 Min Read

சென்னை, ஆக.6  14 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, 2024-2025 நிதியாண்டில் தமிழ்நாடு இரட்டை இலக்க பொருளாதார வளர்ச் சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% ஆக உள்ளது. இந்த வளர்ச்சி, மாநில அரசு நடப்பு ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் கணித்த 9% வளர்ச்சியைவிட சுமார் 2.2% அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன்னர், 2010-2011 நிதியாண்டில் தமிழ்நாடு 13.12% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. இரண்டு முறையும் தி.மு.க. ஆட்சியில் இருந்தது ஒரு தற்செயல் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. சென்னைப் பொருளாதாரப் பள்ளியின் மேனாள் இயக் குனர் கே.ஆர். சண்முகம், சேவைத் துறை மற்றும் இரண் டாம் நிலைத் துறைகளின் வலுவான செயல்திறனே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

சுமார் அய்ந்து மாதங்களுக்கு முன்பு வெளி யிடப்பட்ட மாநில வாரியான முன்கணிப்பு மதிப்பீடுகளில், தமிழ்நாட்டின் வளர்ச்சி 9.69% ஆக இருந்தது. தற்போது அது 1.5% உயர்ந்துள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இருப்பினும், கோவா, குஜராத் உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களின் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

தனிநபர் வருமானத்தில் மூன்றாவது இடம்

தற்போதைய விலையின் அடிப்படையில், தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தி (NSDP) தரவுகளின்படி, தமிழ்நாடு பெரிய மாநிலங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2024-2025 நிதியாண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ.3,61,619 ஆக உள்ளது. தெலங்கானா (₹3,87,623) மற்றும் கருநாடகா (₹3,80,906) ஆகிய மாநிலங்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

நிதியியல் ஆலோசகர் கருத்து

தமிழ்நாடு நிதித்துறையின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றும் டாக்டர் சண்முகம், ” தமிழ்நாட்டின்  ஏற்றுமதி செயல்திறனை வலுப்படுத்தி, இதே வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்து தக்கவைத்தால், 2031-32க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டும் பாதையில் உள்ளது” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த அதிக வளர்ச்சி விகிதம், குறைந்த நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கடன் விகிதம் குறைதல் போன்ற நிதி குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுக் கும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், முக்கிய துறைகள் அனைத்தும் 2024-2025 இல் இருந்ததைவிட அரை சதவிகிதம் அதிகமாக வளர்ந் தால், 2025-26 நிதியாண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி சுமார் 12% ஆக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-2025 நிதியாண்டில் மற்ற சில மாநிலங்களின் வளர்ச்சி விகிதங்கள்   உத்தரப் பிர தேசம்: 8.99%  ஆந்திரப் பிரதேசம்: 8.21%  தெலங்கானா: 8.08%  கர்நாடகா: 7.37%  மகாராட்டிரா: 7.27%

எப்படி சாத்தியமானது?

பொருளாதார வளர்ச்சியில் சேவைத் துறை  மற்றும் உற்பத்தித் துறை (Secondary sector) ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. செய்தியில், இந்த இரண்டு துறைகளின் வலுவான செயல்திறனே வளர்ச்சிக்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தகவல் தொழில் நுட்பம், நிதிச் சேவைகள், உற்பத்தி மற்றும் தொழில்துறை வளர்ச்சி ஆகியவை இந்த வேகமான வளர்ச்சிக்கு உதவியுள்ளன.

மகத்தான மகளிரின் பங்கு

திமுக அரசு பதவி ஏற்ற உடனேயே கட்டணமில்லா பேருந்து திட்டம் அமலுக்கு வந்தது. இந்த கட்டணமில்லா பேருந்துப் பயணம், தமிழ்நாட்டின் இந்த இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல வழிகளில் உதவியுள்ளது.

கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், பெண்களின் பயணச் செலவைக் கணிச மாகக் குறைத்துள்ளது. இதனால், பல பெண்கள் வீட்டு வேலைகளைத் தாண்டி, வேலைக்குச் செல்வதற்கும், சிறிய அளவிலான வியாபாரங்களில் ஈடுபடுவதற்கும் ஊக்குவிக்கப் பட்டுள்ளனர். இது பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதத்தை (Female Labour Force Participation Rate) அதிகரித்துள்ளது.

பெண்கள் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்போது, தொழில் நிறுவனங்களுக்குத் திறமையான ஊழியர்கள் கிடைப்பது எளிதாகிறது. திறமையான ஊழியரக்ள் கிடைக்கும் போது நிறுவனத்தின் உற்பத்தி திறனும் முதலீட்டாளர்கள் நம்பிக்கையும் கிடைக்கிறது. இதனால் தான் இந்தியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில் முதலிடத்தில் தமிழ்நாடு உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *