செய்யாறு, ஆக.5- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் சிறுநல்லூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் து.சின்னதுரைக்கு பணி நிறைவு பாராட்டு விழா மற்றும் அறுபதாம் ஆண்டு மணி விழா 31.7.2025 மாலை 6 மணிக்கு சிறுநல்லூரில் சிறப்பாக நடைபெற்றது.
செய்யாறு மாவட்ட பகுத்றிவாளர் கழகத் தலைவர் வி.வெங்கட் ராமன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து து.சின்னதுரையின் கழகப் பணிகளை எடுத்து ரைத்தார்.
பார்ப்பாந்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவி யாளாக 20 ஆண்டுகள் பணியாற்றி தம் 60 வயதில் பணி ஓய்வு பெற்ற து.சின்னதுரை, சி.கலாவதி இணையரை வாழ்த்தி செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.இளங்கோவன், மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர் நகரத் தலைவர் தி.காமராசன், பொதுக்குழு உறுப்பினர் என்.வி.கோவிந்தன், மேனல்லூர் அரசு மேனிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஒ.தயாளன், கல்வித்துறை பணியாளர் சி.லதா, அஞ்சல் துறை அலுவலர் பா.முத்து, காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ.முரளி ஆகியோர் பேசியதை அடுத்து காஞ்சிபுரம் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நாத்திகம் நாகராசன் சிறப்புரையாற்றினார். து.சின்னதுரை ஏற்புரை வழங்க சி.கதிரவன் நன்றி கூறினார்.
இவ்விழாவில் முனைவர் மு.தமிழ்மொழி, மாவட்ட கல்வி அலுவலர் பா.கோவிந்தசாமி, திராவிட மாணவர் கழக தலைவர் செ.அரவிந்த், பா.கலையரசன், செய்யாறு நகர கழக செயலாளர் எஸ்.சீனிவாசன், சென்னை எஸ்.ரவி, ஆர்.சசிகலா, நெடுங்கல் பொ.அண்ணாதுரை, அ.சுசிகலா, சிறுநல்லூர் சி.கதிரவன், கனிமொழி, பாப்பாந்தாங்கல் அரசி னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் டி.ஜோதி மணி, ஜெ.சியமளா, ஆர்.எம். தணிகை மணி மற் றும் அரசியல் கட்சி பிர முகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.