கொல்கத்தா, ஆக.4 மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியலில் பெரிய அளவில் பெயா்களை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது; பாஜகவின் இந்த முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம் என்று மாநில முதலமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா தெரிவித்துள்ளாா்.
பாஜக ஆளும் மாநிலங்க ளில் மேற்கு வங்க மாநிலத்த வா் துன்புறுத்தலுக்கு உள்ளாக் கப்படுவதாகவும் அவா் குற்றஞ் சாட்டினாா்.
வாக்காளர் பட்டியல் திருத்தம்
நடப்பாண்டு இறுதியில் பேர வைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பீகாரில் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்புக்கு இடையே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை களையெடுப்பதாக குறிப்பிட்டு, இப்பணிகள் நடை பெற்று வருகின்றன. அதன்படி, 2003-க்கு பிறகு வாக்களா் பட்டியலில் இடம்பெற்றவா்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை சமா்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை விரை வில் நாடு முழுவதும் மேற்கொள்ளப் படவுள்ளது.
இந்நிலையில், ஒடிசாவில் வங்கதேசத்தினா் என்ற சந்தேகத்தில் வங்க மொழி பேசும் மேற்கு வங்க தொழிலாளா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். இதேபோல், டில்லியில் மேற்கு வங்க தொழிலாளா்கள் அதிகம் வசிக்கும் குடிசைப் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், இந்த நிகழ்வுகளை முன்வைத்து, மாநில அடையாள அரசியலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கையிலெடுத் துள்ளது.
குற்றச்சாட்டு
வங்க மொழி பேசும் தங்கள் மாநிலத் தொழிலாளா்களை சட்டவிரோத குடியேறிகளாக சித்தரிக்க பாஜக முயற்சிப்பதாக திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.
பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காளிகள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக கூறி, கொல்கத்தாவில் முதல்வா் மம்தா தலைமையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் 3 கி.மீ. தொலைவுக்கு பிரம்மாண்ட பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பாஜகவுக்கு சவால்: இதில் மம்தா பேசியதாவது: மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா்களை நீக்கியே பாஜக வெற்றி பெற்றது; அதையே பிகாரில் இப்போது செய்து கொண்டிருக்கின்றனா்.
மேற்கு வங்க வாக்காளா் பட்டியலில் பெரிய அளவிலான பெயா் நீக்கத்துக்கு பாஜக திட்ட மிட்டுள்ளது. அவா்களின் முயற்சியை முழுவீச்சில் எதிா்ப்போம். வங்க மொழி பேசுபவா்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்பும் பாஜகவை, மேற்கு வங்கத் தோ்தலில் மக்கள் தடுத்து நிறுத்துவா்.
நாட்டின் பிற பகுதிகளில் 22 லட்சம் மேற்கு வங்கத் தொழிலாளா்கள் பணியாற்று கின்றனா். அவா்களிடம் செல்லத்தக்க அடையாள ஆவணங்கள் உள்ளன. வங்க மொழி பேசும் தொழிலாளா்கள் அனைவரும் ரோஹிங்கயா முஸ்லிம்களா?
இனிமேல் வங்க மொழியில் அதிகம் பேச முடிவு செய்துள்ளேன்; முடிந்தால் என்னை தடுப்பு முகாமுக்கு அனுப்புங்கள். வங்காளிகள் மீதான பாஜகவின் அணுகுமுறையால் நான் அவமானமும் வேதனையும் அடைகிறேன் என்றாா்
இவ்வாறு அவர் கூறினார்.