தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிரிவு 4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு!

2 Min Read

சென்னை, ஆக. 3- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர் உட்பட 3,935 பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 12 அன்று நடைபெற்ற இத்தேர்வை மொத்தம் 11,48,019 பேர் எழுதியிருந்தனர்.

தேர்வு விவரங்கள் மற்றும் போட்டி

இந்த குரூப் 4 தேர்வுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 11,48,019 பேர் தேர்வில் பங்கேற்றனர். 2,41,719 பேர் தேர்வு எழுதவில்லை. இதனால், ஒரு பணி இடத்திற்கு 292 பேர் போட்டியிடுகின்றனர். தேர்வு கடினமாக இருந்ததாகவும், குறிப்பாக தமிழ் மொழித் தேர்வில் பாடத்திட்டத்திற்கு வெளியே கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.

முடிவு வெளியீடு மற்றும் எதிர்பார்ப்புகள்

தேர்வு முடிந்த பிறகு மூன்று மாதங்களுக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என முன்னதாக தேர்வாணையம் தெரிவித்திருந்தது. தற்போது அக்டோபர் மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என்ற அறிவிப்பு தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

காலிப்பணியிடங்கள் அதிகரிக்குமா?

தற்போது 3,935 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் முதலில் 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு, பின்னர் அது 9,532 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் பிரபாகர் அளித்த பேட்டியில், “நடப்பு ஆண்டு குரூப் 4 தேர்வில் அறிவிக்கப்பட்டுள்ள 3,935 காலிப்பணியிடங்கள் ஒரு தோராயமான எண்ணிக்கைதான். தேர்வுகள் முடிந்த பிறகு கலந்தாய்வு (கவுன்சிலிங்) தொடங்கும் வரை காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. பல்வேறு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வரும்போது, குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை விட நிச்சயமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *