டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
* பாஜவுக்கு ஆதரவாக வாக்கு திருட்டு! தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டு – ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* காங்கிரஸ் கட்சி சார்பில் ’சட்ட மாநாடு’ இன்று டில்லியில் நடைபெறுகிறது. ரேவந்த் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
* மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அனைவரும் விடுதலை? நீதி மறுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளது தலையங்கம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “பீகார், தமிழ்நாடு, உ.பி. தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் ஓபிசிக்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்” காங்கிரஸ் ஓபிசி துறை தலைவர் அனில் ஜெய்ஹிந்த் பேட்டி.
தி இந்து:
* செப்.9ஆம் தேதி துணை குடியரசுத் தலைவர் தேர்தல்; அதே நாளில் வாக்கு எண்ணிக்கை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தி டெலிகிராப்:
* வர்த்தகப் போர் தொடுத்த அதிபர் டிரம்ப் இந்தியா உட்பட 70 நாடுகளுக்கு புதிய வரி விதிப்பு. 7ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவுக்கு அதிகம்.
* மாநிலங்களவையில் உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய சிஅய்எஸ்எப் வீரர்கள்: ‘நாடாளுமன்றமா அல்லது கோட்டையா?’:எதிர்க்கட்சித் தலைவர் கார்கே கண்டனம்.
– குடந்தை கருணா