சிங்கப்பூர், ஆக. 2- சிங்கப்பூரின் தஞ்சோங் கட்டோங் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று விழுந்தது. காரில் சிக்கி யிருந்த ஒரு பெண்ணை பிச்சை உடையப்பன் தலைமையிலான 7 தமிழர்கள் பத்திரமாக மீட்டனர். இந்தப் பாராட்டத்தக்க செயலுக்காக அவர்களுக்குப் பொதுமக்கள் மத்தி யில் பெரும் பாராட்டு குவிந்து வருகிறது.
வீரர்களுக்கும் சிங்கப்பூர் அதிபர் சண்முகரத்தினம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும், ஆகஸ்ட் 3ஆம் தேதி அவர்களை நேரில் சந்தித்து உரையாடி, விருந்தளிக்கவும் திட்டமிட்டுள்ளார்.
பிச்சை உடையப்பன் சுப்பையா (47)வேல்முருகன் முத்துசாமி (27)பூமாலை சரவணன் (28)கணேசன் வீரசேகர் (32)போஸ் அஜித் குமார் (26)நாராயணசாமி மாயகிருஷ்ணன் (25) சாத்தபிள்ளை ராஜேந்திரன் (56)
இவர்களைப் பாராட்டும் விதமாக, 1,639 பேர் இணைந்து 72,241 சிங்கப்பூர் டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் 44.5 லட்சம் ரூபாய்) பரிசாக அளித்துள்ளனர் எனப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொண்டு நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.