வணக்கம் தோழர்களே,
“எதிர்ப்பிலே வளர்ந்த ஈ.வெ.ரா” என்ற புத்தகம் 1952இல் வெளியானது. அதில் உள்ள முக்கிய சாராம்சங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பெரியார் வலைதள பார்வை Periyar OTT visionஇல் எடுத்து இயம்பியதை பார்த்தேன். உண்மையின் வலிமையை உணர்ந்து பலம் பெற்ற பெரியார் ஒரு கோப்பில் கையெழுத்து போட்டது தான் இல்லை என மறுக்காமல் சிறை தண்டனையை எதிர்கொள்வது எப்படி என்று தன்னை தயார்படுத்தி கொண்டார் என்று அந்த நூலில் உள்ள செய்திகளில் ஒன்றை அடிக்கோடிட்டு பேசியது மிகவும் அருமை. இன்றைய இளையவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அவசியம் பற்றி பல கருத்துக்களை அந்த நூலில் ஆசிரியர் மேற்கோள்கள் காட்டி இருக்கிறார்கள். வாசகர்கள், பார்வையாளர்கள் அனைவரும் இந்த வலை தள காணொளியை அவசியம் காண வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
தங்களுடன்
க.கிருபாகரன், பாளையங்கோட்டை
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்துகொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!
இணைப்பு :
periyarvision.com