திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோரின் சகோதரி மாலதியின் மருமகனும், பெரியார் வலைக் காட்சியின் தகவல் தொழில்நுட்ப மேனாள் பணியாளர் கலைமதியின் வாழ்விணையருமான ரெவ்.ஆர்.செல்லப்பா அவர்கள் நேற்று (31.07.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். ஜாதி, மதங்களை கடந்து வாழ்க்கை இணை ஏற்றவர்கள் இருவரும்; சமூகநீதி சிந்தனையில் ஆழ்ந்த பற்று கொண்டவரான ரெவ்.ஆர்.செல்லப்பா அவர்களின் மறைவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், பெரியார் திடல் பணித் தோழர்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் தொலைபேசி வாயிலாக தோழர் கலைமதி அவர்களைத் தொடர்புகொண்டு ஆறுதலை தெரிவித்தார்கள்.