மேகாலயாவில் நான்காயிரம் டன் நிலக்கரி மழையில் அடித்து செல்லப்பட்டதாம்! அமைச்சரின் வினோத விளக்கம்

கவுகாத்தி, ஆக.1 மேகாலயாவில் 4 ஆயிரம் டன் நிலக்கரி காணாமல் போன உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், நிலக்கரி மழையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது என்று அமைச்சர் விளக்கம் அளித்து இருப்பது சர்ச் சையாகி இருக்கிறது.

வருவாய், கலால் அமைச்சர்

மேகாலயாவில் கான்ராடு சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மாநிலத்தின் வருவாய், கலால்வரி மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக இருப்பவர் கைர்மென் ஷில்லா. பேரிடர் மேலாண்மைத் துறைக்கும் இவர்தான் அமைச்சர் ஆவார். மாநிலத்தில் மிக இளம் வயது அமைச்சர் என் பெருமைக்குரியவர்.

இவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு சிக்கலில் மாட்டி உள்ளார்.

மேகாலயாவில் நிலக்கரி சுரங்க முறைகேடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இங்குள்ள ஜெயந்தியா மலைக் குன்றுகளின் அடிவாரத்தில் பல்வேறு நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. ராஜாஜு மற்றும் டியெங்கன் கிராமங்களில் உள்ள 2 நிலக்கரி கிடங்கு களில் இருந்து சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்ட சுமார் 4 ஆயிரம் டன் நிலக்கரி கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அவை சமீபத்தில் காணாமல் போனதாக தகவல் வெளியானது.

உயர்நீதிமன்றம் கண்டனம்

இதுகுறித்து மாநில அரசை மேகாலயா உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு கடுமையாக கண்டித்தது. சட்டவிரோத நிலக்கரி போக்குவரத்தை அனுமதித்த தனிநபர்கள் மற்றும் அதிகாரிகளை அடையாளம் காணுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

வினோதமான பதில்

இந்த நிலையில், வருவாய்த் துறை அமைச்சர் கைர்மென், இது குறித்து வினோதமான விளக்கத்தை அளித்து உள்ளார். அது மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவர் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

“சட்டவிரோத நிலக்கரி வர்த்தகம் இருப்பதை மறுக்கவில்லை. அதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் நாட்டில் பெய்த கனமழையால் எதுவும் நடக்கலாம் என்பதை நமக்கு நாம் நினைவூட்டிக்கொள்ள வேண்டும். மேகலயாவில் பெய்த கனமழையால் அசாமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, கிழக்கு ஜெயந்தியா மலைகளில் இருந்து மழை வெள்ளம் வங்காளதேசத்துக்கு சென்றது. இத்தகைய கனமழையால் நிலக்கரி சுரங்கங்களில் இருந்த நிலக்கரி அண்டை மாநிலம் மற்றும் அண்டை தேசத்துக்கு அடித்துச்செல்லப்பட்டது. அவை ஆற்றின் அடிமடியில் இருக்கலாம்.

மழையை மட்டும் நான் குறைசொல்ல முடியாது. சட் டவிரோத போக்குவரத்து நடந்ததாக சொல்ல என்னிடம் எந்த விவரங்களும் இல்லை. அதை நாம் சட்டம் மற்றும் அதிகாரத்தின்படி உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அவரது இந்த கருத்து பெரும் சர்ச் சையை கிளப்பி உள்ளது. எதிர்க் கட்சிகள் இது குறித்து காரசாரமான விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *