சத்தீஸ்கரில் கிறிஸ்தவ மருத்துவமனை சூறை

1 Min Read

ஹிந்துத்துவ கும்பல் வெறிச் செயல்

பிலாஸ்பூர் சத்தீஸ்கர் ஆக1,  சத்தீஸ்கரின் தம்ந்தரி மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான தம்ந்தரி கிறிஸ்டியன் மருத்துவமனை மீது மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடு வதாகக் கூறி, ஹிந்துத்துவ குண்டர்களும் பாஜகவினரும் மருத்துவமனையை அடித்து நொறுக்கினர்.

சத்தீஸ்கரில் ரோமன் கத்தோலிக்க அமைப்பின் கீழ்  நடத்தப்படும் சுமார் 250 படுக்கைகள் கொண்ட இந்த பல்நோக்கு மருத்துவமனை, 1903 ஆம் ஆண்டு முதல் இப்பகுதி மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தீடிரென மருத்துவமனை மக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யதூண்டுவதாகவும், கிறிஸ்தவப் பெயர்களை வைக்க அனைத்து மருத்துவப் பயனாளிகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறி பா.ஜ.க. மற்றும் ஹிந்து அமைப்புகள் போராட்டம் என்ற பெயரில் மருத்துவமனைக்குள் புகுந்து பொருட்களை உடைத்தனர். மேலும் சேவை அமைப்புகளால் தரப்பட்ட படுக்கை மற்றும் குடிநீர் உபகரணம், தொலைகாட்சி மற்றும் அலங்கார விளக்குகளையும் உடைத்துவீசினர்.

மேலும், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மிரட்டி இங்கு வேலை செய்தால் மோசடி புகார் அளிக்கப்படும் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளனர். இந்த  நிலையில் இதனை காணொலிகளாக பதிவு செய்து  காவல்துறையினரிடம் மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்துள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *