சென்னை, ஜூலை 31– நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் மீதான புகார் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உரிய விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியு றுத்தியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப்பட் டுள்ளதாவது;-
“சென்னை உயர்நீதிமன்றத் தின் மதுரை கிளையைச் சார்ந்த வழக் குரைஞர் வாஞ்சிநாதன்மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சுமத்தி அவரை அச்சுறுத்தும் வகையில் நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் நடந்திருப்பது, குறிப்பாக நீதிமன்றத்திலேயே பலரின் முன்னிலையில் நீ ஒரு கோழையா? என்றும் அவர் பேசியிருப்பது அதிர்ச் சியளிக்கிறது. இந்தப் போக்கு கண்டனத்துக்குரியதாகும்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு வழக்குரைஞர் வாஞ்சிநாதன், நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் மீது 14 பக்கங்களைக் கொண்ட புகார் மனு ஒன்றை அனுப்பியிருந்தார் என்பதை அறிந்தே அவர் ஆத்திரப்பட்டு இவ்வாறு நடந்திருக்கிறார் என்றும் தெரிகிறது.
ஜாதி மதம் பார்த்து, வேண்டியோர் வேண்டாதோர் என பார்த்து தீர்ப்பு வழங் குகிறார் என்பதையும், சராசரி நபர்களைப்போல ஜாதி-மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று ஒருசார்பு நிலையெடுத்துப் பேசுகிறார் என்பதையும் அந்தப் புகா ரில் வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருக் கிறார் எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், ஒரு வழக்குரைஞருக்கு எதிராக தனது சட்டபூர்வமான அதிகாரத்தை பயன்படுத்த முனைவது எவ்வகையில் ஏற் புடையதாகும்? அவர் தனக்கு எதிரான புகாரைத் தானே எப்படி விசாரிக்க முடியும்?
இதில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உடனே தலையிட்டு வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் பழிவாங்கும் நடவடிக்கையை உடனே தடுத்திட வேண்டுமென கோருகிறோம். அத்துடன் நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் மீதான புகார் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உரிய விசாரணை நடத்திட ஆவன செய்ய வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.