சென்னை, ஜூலை 31– தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த, 4,687 பேர், கடந்த இரண்டு ஆண்டுகளில், தாட்கோவில் மானியத்துடன் கூடிய கடன் பெற்று, சுயதொழில் செய்து முன்னேறி வருகின்றனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமான தாட்கோ நிறுவனம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பல்வேறு உதவிகள் செய்யப் படுகின்றன. இச்சமூக மக்கள் தொழில் துவங்க, தொழிலை விரிவுபடுத்த ஒன்றிய – மாநில அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய கடன், தாட்கோ வழியே வழங்கப் படுகிறது.
முதலமைச்சரின் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் சமூக மக்களுக்கு, அதிக பட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதில், 3.5 லட்சம் ரூபாய் மானியம். முதலமைச்சரின் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் சமூக மக்களுக்கு, அதிக பட்சம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதில், 3.5 லட்சம் ரூபாய் மானியம்.
இத்திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில், 4,687 பேர் பயன் அடைந்துள்ளனர். ஆட்டோ வாங்குதல், அழகு நிலையம் அமைத்தல் என, 15 பிரிவுகளின் கீழ், 89 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் பெற்றவர்கள், சுய தொழில் துவங்கி முன்னேறி வருகின்றனர்.