எடப்பாடி வெள்ளாண்டி வலசை காமராஜ் நகரில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் ப.இராமலிங்கத்தை 22.7.2025 அன்று மாலை அவரது இல்லத்தில் மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா.பாலு சந்தித்து பயனாடை அணிவித்தும் புத்தகங்கள் வழங்கியும் 81ஆவது பிறந்த நாள் வாழ்ததுகளைத் தெரிவித்தார்.
மேட்டூர் மாவட்ட கழக காப்பாளர் பழனி.புள்ளையண்ணன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோபி.அன்புமதி எலுமிச்சம் கனி வழங்கியும், சா.ரவி பெரியார் பிஞ்சு புத்தகம் வழங்கியும், அ.இராஜராசன் பயனாடை அணிவித்தும், வை.இராமகிருஷ்ணன் புத்தகம் வழங்கியும் காங்கிரஸ் தோழர் அ.சுந்தரம் பயனாடை அணிவித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
பெரியார் பெருந்தொண்டர் ப.இராமலிங்கம் தனது 81ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா. பாலுவிடம் ஓராண்டு விடுதலை சந்தாவை வழங்கினார்.