ஆத்தூர், ஜூலை 28- ஆத்தூர் கழக கலந்துரையாடல் கூட்டம் 27.7.2025 அன்று காலை 11.30 மணியளவில் மாவட்ட காப்பாளர் த.வானவில் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் த.வானவில் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் நீ.சேகர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட தலைவர் அ. சுரேஷ், மாவட்ட காப்பாளர் இரா. விடுதலை சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் தம்மம்பட்டி சி. ஜெயராமன், ப.க. மாவட்ட தலைவர் வ. முருகானந்தம், ப.க. மாவட்ட செயலாளர் அ. அறிவுசெல்வம், ஆத்தூர் நகர தலைவர் வெ. அண்ணாதுரை, நரசிங்கபுரம் நகர தலைவர், வே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்கவுரையாக பக மாநில அமைப்பாளர் இரா. மாயக்கண்ணன், பக மாநில பொதுச்செயலாளர் வா. தமிழ்பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தினை சிறப்பாக எடுத்துரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.கார்முகிலன், மாணவர் கழக மாவட்ட செயலாளர் ச.அஜித்குமார், பெரியார் பெருந்தொண்டர்கள் ஏ.வி.தங்கவேல், தும்பல் அங்கமுத்து, ப.க. மாவட்ட துணை தலைவர் இலுப்பநத்தம் கா. பெரியசாமி, செந்தாரப்பட்டி ரா. ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தீர்மானங்களை நிறைவேற்றபட்டன.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று பெரியார் உலகத்திற்கு ஊக்கம் தந்து ஆத்தூர் கழகத்தின் சார்பாக ருபாய் பத்து லட்சம் தருவதாக தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்ட மாவட்ட குழு அமைக்கப்பட்டது
இக்குழுவின் தலைவர் அ. சுரேஷ், செயலாளர் நீ. சேகர், அமைப்பாளராக த. வானவில், இரா. விடுதலை சந்திரன், வெ. அண்ணாதுரை, ஏ.வி.தங்கவேல், வா. தமிழ்பிரபாகரன், இரா. மாயக்கண்ணன், வ. முருகா னந்தம், அ.அறிவுசெல்வம், நரசிங்க புரம் வே. மணி ஆகியோர் நிதிக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப் பட்டனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட ‘விடுதலை’ பழைய புதிய சந்தாக்களை தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளுக்குள் கொடுப்பதாக நிறை வேற்றப்பட்டது.
அறிவாசான் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளை மாவட்ட அளவில் மிக சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் உலகத்திற்கு ஒரு லட்சம் நிதி தருவதாக பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி.தங்கவேல், ஏ.டி.அங்கம்மாள் – ஆத்தூர் மாவட்ட காப்பாளர் த. வானவில் சந்திரா – ஆத்தூர், மாவட்ட காப்பாளர் இரா. விடுதலை சந்திரன் ராணி – ஆத்தூர், நகர தலைவர் வெ. அண்ணாதூரை காசாம்பு – தென்னங்குடிப்பாளையம், மாவட்ட செயலாளர் நீ. சேகர் முத்துலட்சுமி – புத்தூர், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வ. முருகானந்தம் ஜானகி, கிழக்கு ராஜாபாளையம், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா. மாயக்கண்ணன் சத்தியா ஆகியோர் ஏழு லட்சமும் மீதி உள்ள மூன்று லட்சத்தை வசூல் செய்து ருபாய் பத்து லட்சத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மொத்தமாகக் கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
நரசிங்கபுரம் நகர தலைவர் வே.மணி, மாணவர் கழக மாவட்ட செயலாளர் ச.அஜித்குமார் ஆகியோர் இரண்டு விடுதலை ஆண்டு சந்தாக்களை மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமனிடம் வழங்கினார்கள். இளைஞரணி மாவட்ட தலைவர் கார்முகிலன் நன்றி கூறினார்.