பெர்லின். ஜூலை 28- ஜெர்மனியின் தென்மேற்கு மாநிலமான பிடன் உர்ட்பெர்க் நகரில் நடந்த ரயில் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பயணிகள் பயணித்த ரயிலில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அப் பகுதி தீயணைப்புத் துறையின் தலைவர் தெரி வித்துள்ளார்.
ஜெர்மனியில் மேற்கு பகுதியில் கடுமையான புயல் வீசியதால் கட்டடங்கள் மற்றும் சாலைகள் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பிடன் உர்ட்பெர்க் நகரில் ரயில் விபத்தும் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜெர்மனி யின் தேசிய ரயில் சேவை நிறுவனமான டச்சு புஹாவின் தலைமை நிர்வாகி, இந்த விபத்து குறித்து அதிர்ச்சியையும் இறந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்து உள்ளார். விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட அவர் செல்லவுள்ளார்.
இந்த விபத்து ஜெர்மனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளதுடன், ரயில் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. புயல் குறித்த முன்னெச்சரிக்கை விடப்பட்டதா? மேலும் ரயில் சேவை அப் பகுதி யில் எப்படி இயங்கி யது என்பதற்காக ஜெர்மனி ரயில்வே துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.