மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பாம்!

1 Min Read

புதுடில்லி, ஜூலை 27   வடகிழக்கு மாநில​மான மணிப்​பூரில் மைத்தேயி மற்​றும் குகி ஆகிய இரு இனக் குழுக்​களுக்கு இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி தொடங்​கிய மோதல் பெரும் வன்​முறை​யாக வெடித்​தது. இதில், 250 பேர் உயி​ரிழந்​ததுடன் 60,000-க்​கும் மேற்பட்டோர் தங்​கள் இருப்​பிடங்​களை விட்டு வெளி​யேறும் சூழல் ஏற்​பட்​டது.

குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிப்பு

கலவரத்தை கட்​டுப்படுத்த முடி​யாத நிலை​யில் மணிப்​பூர் முதலமைச்சர் என்​.பிரேன் சிங்   பதவி விலகினார். இதையடுத்​து, கடந்த பிப்​ர​வரி 13 முதல் மணிப்​பூரில் குடியரசுத் தலை​வர் ஆட்சி அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இந்த நிலை​யில், மேலும், 6 மாதங்​களுக்கு குடியரசுத் தலை​வர் ஆட்​சியை நீ்ட்​டிக்க வகை செய்​யும் தீர்​மானத்தை மாநிலங்களவையில் ஒன்றிய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா அறி​முகப்​படுத்​தி​னார்.

மாநிலங்​களவை செய்​திக்​குறிப்​பில் இதுகுறித்து தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாவது:

அரசி​யலமைப்​புச் சட்​டப் பிரிவு 356-இன் கீழ் மணிப்​பூர் மாநிலத்​தில் 2025, பிப்​ர​வரி 13-இல் பிரகடனம் செய்​யப்​பட்ட குடியரசுத் தலை​வர் ஆட்​சியை மேலும் 6 மாதங்​கள் தொடர்ந்து நீட்​டிப்​பதற்​கான ஒப்​புதலை அவை வழங்​கி​யுள்​ளது. இது, வரும் ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதியி​லிருந்து அமலுக்கு வரும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *