புதுடில்லி, ஜூலை 27– அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது:
இந்திய குடிமக்கள் துப்பாக்கி முனையில் வங்கதேசத்துக்குள் தள்ளப்படுகின்றனர் என்ற கவலையளிக்க கூடிய தகவல்கள் வெளிவருகின்றன.
வங்கமொழி பேசும் முஸ்லிம் களை காவல்துறையினர் சட்ட விரோதமாக கைது செய்து செய்து வங்கதேசத்தினர் என குற்றம்சாட்டுகின்றனர்.
அவர்கள் ஏழைகள், குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்கள், துப்பரவு தொழிலாளர்கள், காவல்துறையினரின் அராஜகத்தை அவர்களால் எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
இவ்வாறு ஒவைசி கூறியுள்ளார்.