நிதிஷ் ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது  அமைச்சர் சிராக் பஸ்வான் பளிச்

3 Min Read

பாட்னா, ஜூலை 27 பீகாரில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில், அய்க்கிய ஜனதா தளம் – பா.ஜ., அடங்கிய தே.ஜ.,கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இக்கூட்டணியில், லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

பீகாரில் வரும் அக்டோபரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் கூட்டணியும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

இந்நிலையில், பீகாரில் ஆளும் தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி தலைவரும், ஒன்றிய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான், செய்தியாளர்களிடம் நேற்று (26.7.2025) கூறியதாவது:

பீகார் முழுதும் கொலை, கொள்ளை, கடத்தல், பாலியல் கொடுமை போன்ற குற்றச் செயல்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த, மாநில அரசு முற்றிலும் தவறி விட்டது. இந்த அரசு குற்றவாளிகளிடம் சர ணடைந்து விட்டது.

தற்போதைய சூழலில், பீகார் மக்கள் பாதுகாப்பாக உணரவில்லை. குற்றங்கள் ஏன் குறையவில்லை என, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். குற்றங்களை தடுக்க தவறிய மாநில அரசை ஆதரிப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

தேசிய அரசியலில் நீண்ட காலம் இருப்பது என் நோக்கமல்ல. பீகாருக்காகவும், அதன் மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும் என்பதே என் லட்சியம். டில்லியில் இருந்தால் அதை செய்ய முடியாது.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். கடந்த லோக்சபா தேர்தலை போலவே சட்டசபை தேர்தலிலும் 100 சதவீத வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

ஓய்வுக்கு பின் அரசு பதவி ஏற்க மாட்டேன்: தலைமை நீதிபதி

அமராவதி,ஜூலை 27 “ஓய்வுக்கு பின் எந்த அரசு பதவியையும் ஏற்க மாட்டேன்,” என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உறுதிபட தெரிவித் துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த மே மாதம் பி.ஆர்.கவாய் பொறுப்பேற்றார். இவர், மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத் தில் உள்ள தன் சொந்த ஊரான தாராபூருக்கு அண்மையில் சென்றார்.

கேரளா மற்றும் பீஹாரின் மேனாள் ஆளுநரும், தன் தந்தையுமான பி.எஸ்.கவாயின் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவருக்கு, ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தன் தந்தையின் 10ஆவது நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், தாராபூர் கிராமத்திற்குச் செல்லும் வழியில், தன் தந்தையின் பெயரில் கட்டப்படவுள்ள ஒரு பிரமாண்டமான நுழைவாயிலுக்கு கவாய் அடிக்கல் நாட்டினார். பின், அமராவதி மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில், மறைந்த டி.ஆர்.கில்டா நினைவு மின் நுாலகத்தின் துவக்க விழாவில் பங்கேற்று, அவர் பேசியதாவது:

நான், நவ., 23இல் பணி ஓய்வு பெறுகிறேன். ஓய்வுக்கு பின், எந்த அரசு பதவியையும் ஏற்கக் கூடாது என முடிவு செய்துள்ளேன். இதை, ஏற்ெகனவே பலமுறை கூறியுள்ளேன். எனவே, பணி ஓய்வுக்கு பின், எனக்கு அதிக நேரம் கிடைக்கும் என நம்புகிறேன். தாராபூர், அமராவதி மற்றும் நாக்பூர் பகுதி களில் இந்த நேரத்தை செலவிட விரும்புகிறேன்.

மக்களுக்கு எளிதில் நீதி கிடைப்பதற்கான மத்தியஸ்த நடவடிக்கைகளையும் அப்போது மேற்கொள்வேன். இதற்காக, சட்ட ஆலோசனை மன்றங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவு

 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வி!

 – காங்கிரஸ் சாடல்

புதுடில்லி, ஜூலை 27 –அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி உள்ள காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைதோல்வி அடைந்துவிட்ட தாக குற்றம்சாட்டி உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ளசமூக வலைதளப் பதிவில், ஆப்ரேசன் சிந்தூரை தாம் நிறுத்தியதாக 25ஆவது முறையாக அதிபர் டிரம்ப் கூறியதை சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்தியாவின் தோல்வி

சண்டையை நிறுத்தாவிட்டால், தங்களுடனான வர்த்தக ஒப்பந்தம் கிடையாது என 2025மே10ஆம் தேதி டிரம்ப் கூறியதை சுட்டிக்காட்டி உள்ள ஜெய்ராம் ரமேஷ், அமெரிக்காவின் சென்ட்ரல் கமாண்ட் மைக்கேல் குரில்லா, தீவிரவாதத்தை ஒடுக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையில் பாகிஸ்தான்முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்ததை சுட்டிக்காட்டி உள்ளார்.பாகிஸ்தான் ராணுவ தளபதி அஷிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து, அதிபர் டிரம்ப் விருந்து கொடுத்ததை சுட்டிக்காட்டி உள்ள ஜெய்ராம் ரமேஷ், பஹல்காம் தாக்கு தலுக்கு 2 மாதங்கள் முன்பு, வன்முறை மற்றும் வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பேசிய அஷிம் முனீரை அழைத்து டிரம்ப் உபசரித்ததை சுட்டிக்காட்டி உள்ளார்.

சனிக்கிழமை பாகிஸ்தான் துணைப் பிரதமரை, அமெரிக்காவின் செயலாளர் மார்கோ ரூபியோ சந்தித்ததை யும் இவை அனைத்தும் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் தோல்வி என்றும் ஜெய்ராம் ரமேஷ் சாடி உள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *