நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி மூலம் அம்பலமான உண்மை

2 Min Read

சிறுபான்மை ஆய்வு மாணவர் கல்வி உதவியை
நான்காண்டுகளுக்கு முன்பே நிறுத்திய மோடி அரசு!

புதுடில்லி, ஜூலை 26 – சிறுபான்மை ஆய்வு மாணவர்க்கான கல்வி  உதவித் தொகை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்  சு. வெங்கடேசன்  கேள்வி எழுப்பியிருந்த நிலையில், நான்காண்டுகளுக்கு முன்பே  கல்வி உதவித் திட்டத்தை நிறுத்திவிட்டோம் என்று ஒன்றிய பாஜக அரசு பதிலளித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன், இதுதொடர்பாக தமது சமூக  வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“நாடாளுமன்றத்தில் மவுலானா ஆசாத்  தேசிய கல்வி உதவித்தொகை பல மாதங்களாக  சிறுபான்மை ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படாததும், நூற்றுக்கணக்கான ஆய்வு மாண வர்களின் கல்வி பாதிக்கப்படு வதுமான நிலை  குறித்த கேள்வியை (எண் 484/ 23.07.2025) நான்  எழுப்பி இருந்தேன்.

கல்வி உதவித் தொகை

சிறுபான்மை ஆய்வு மாண வர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை பல மாதங்களாக  ஏன் வழங்கப்படவில்லை? மாண வர்கள், தங்கள் கல்வி மற்றும் நடைமுறை தேவைகளை  எல்லாம் நிறைவுசெய்த பின்பும் ஏன் இந்த நிலை? நிதியமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல்  கிடைக்கவில்லை என்பதுதான் காரணமா? கல்வி உதவித் தொகை வழங்கப்பட என்ன நடவடிக்கைகள் அமைச்சகத்தால் எடுக்கப்பட்டு உள்ளன? என்ற கேள்விகளை எழுப்பி இருந்தேன்.

எனது கேள்விக்கு பதில் அளித்த சிறு பான்மை விவகார அமைச்சர் கிரண் ராஜு  “2022-2023 ஆம் நிதியாண்டிலேயே இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது; என்றாலும், ஏற்கெனவே இந்தத் திட்டத்தில் பயன்பெற்று வருபவர்களுக்கு அவர்கள் கல்வியை முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வரு கிறது. ஜனவரி 2025 இல் இருந்து நிலுவை யில் இருந்த கல்வி உதவித் தொகையை நிதியமைச்சகத்திடம் ஒப்புதல் பெற்று வழங்கும்  பணியை துவங்கி இருக்கிறோம்” என  அமைச்சர் தனது பதிலில் தெரி வித்திருக்கிறார்.

மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாது

“சிறுபான்மை மாணவர்க ளுக்கான மவுலானா ஆசாத் கல்வி உதவித்தொகை நிறுத்தப் பட்டதையே நாங்கள் கண்டித்து இருந்தோம். அது தொடர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆனால், ஏற்கெனவே கல்வி உதவித் தொகை பெற்று வருபவர்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கே ஆறு மாதங்களுக்கும் மேலாக தாமதமாகிறது என்றால், அந்த மாணவர்கள் எவ்வாறு தங்கள்  ஆய்வு படிப்பை தொடர முடியும்?

தற்போது ஒப்புதல் தரப்பட்டு விட்டதாக அமைச்சர் கூறி இருப்பது மகிழ்ச்சி. ஆனால்  சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஒவ்வொன்றிலும் இப்படிப்பட்ட தடைகள்  ஏற்படுத்தப்படுவதும் அவற்றைப் பெறுவதற்காக எங்க ளைப் போன்றவர்கள் போராட வேண்டி இருப்பதும் அவலமான நிலையாகும். அமைச்சர் பதிலிலேயே கூட தாமதத்தை ஏற்றுக் கொள்கிறார். மாணவர்கள் தரப்பி லிருந்து கல்வி, நடைமுறை சார்ந்த தேவைகளை நிறைவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தும்  அவரால் காரணம் கூற முடியவில்லை. நிதி அமைச்சகத்திடமிருந்து ஒப்புதல் பெற ஏற்பட்ட கால தாமதத்திற்கும் காரணம் சொல்லாமல் அவர் கடந்து செல்கிறார். சிறுபான்மை விவகார அமைச்சகம், உண்மையில் சிறுபான்மை யினரின் நலனுக்காக செயல்படுகிறதா என்ற  அய்யம் இந்தப் பிரச்சினையிலும் வலுப்பட்டு உள்ளது.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்  சு. வெங்கடேசன் தெரி வித்துள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *