பாரிஸ், ஜூலை 25- பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன். அவரது மனைவி பிரிஜட் மக்ரோன் திருநங்கை என்று வதந்தி பரப்பிய அமெரிக்காவில் மிகவும் பிரபலமான யுடுயூப் சேனல் ஒன்றை நடத்தும் கேண்டஸ் ஓவன்ஸ் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பிரபலங்களின் மறுபக்கம்
கேண்டஸ் ஓவன்ஸ் “Becoming Brigitte” என்ற தலைப்பில் எட்டு பாகங்கள் கொண்ட தொடரை யூடுயூப் சேனலில் ஒளிபரப்பி வருகிறார் இதில் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களில் மறுபக்கம் என்ற பெயரில் பல தவறான தகவல்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்திகொண்டு இருக்கிறார்.
இவரின் வதந்திகளை பல பிரமுகர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டனர். இந்த நிலையில் அவர் பிரான்ஸ் அதிபரின் மனைவி மீதும் வதந்திகளைப் பரப்பத் துவங்கினார்
பிரென்ஸ் அதிபர் மனைவி ஒரு திருநங்கை என்றும், அவர் ஓரினச்சேர்க்கை கேளிக்கை நிகழ்ச்சியை நடத்துபவர் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரென்ஸ் தூதரகம் மூலம் மிகவும் உயர் பதவியில் உள்ள ஒருவர் மீது தவறான தகவல்களைப் பரப்புவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்று பலமுறை எச்சரிக்கப்பட்ட பின்னரும் கேண்டஸ் ஓவன்ஸ் தனது கருத்தை மாற்றிக்கொள்ளாததால், அவர் மீது வழக்கு தொடரும் நிலை ஏற்பட்டது என்று மக்ரோன் தம்பதியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் புதிதல்ல. இதற்கு முன்னர் பிரான்ஸ் அதிபரின் மனைவி மீது இதேபோன்ற குற்றச்சாட்டைப் பரப்பிய இரு பெண்கள் மீது அவதூறு வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கில், அவ்விரு பெண்களும் அவதூறைப் பரப்பியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது இதனைத் தொடர்ந்து.அவர்கள் மன்னிப்பு கேட்டனர்.
தற்போது மீண்டும் அதிபரின் மனைவிக்கு எதிராக வதந்தி பரப்பத்துவங்கி உள்ளனர் இந்த விவகாரம் பிரான்ஸ் மற்றும் பன்னாட்டு அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.