கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.7.2025

3 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்  உள்ளிட்ட விவாதங்களால் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து முடங்கின. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஒத்திவைக்கப்பட்டன.

* பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் கோயில் தேர் செல்ல வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! பெரம்பலூர் வேப்பந்தட்டை கிராமத்தில் சிறீவேத மாரியம்மன் கோவில் திருவிழா தொடர்பான வழக்கில், குறிப்பிட்ட தெருக்களில் எந்த இடையூறும் இன்றி தேர் செல்ல முடியும் என்ற அறிக்கையை ஏற்று ஆணையிட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம் செய்து போரை நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி 73 நாட்கள் ஆகிறது. இன்னமும் பிரதமர் மோடி இது குறித்து வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கிறார், ராகுல் கடும் கண்டனம்.

* பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் மற்றும் ஆளுநருமான பண்டாரு தத்தாத்ரேயாவை துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் மோடி அரசுக்கு வேண்டுகோள்.

* தெலங்கானா சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு, மோடி அரசு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்கிறது, ரேவந்த் குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒன்றிய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் ஓபிசி பிரிவினருக்கான 80% பேராசிரியர் பணியிடங்களும், எஸ்டி பிரிவினருக்கான 83% பேராசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன என்று அரசு கூறுகிறது. இணைப் பேராசிரியர்களைப் பொறுத்தவரை, எஸ்டி பிரிவினருக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் சுமார் 65% (307 இல் 108 நிரப்பப்பட்டுள்ளன) மற்றும் ஓபிசி பிரிவில் 69% (883 இல் 275) காலியாக இருந்தன. எஸ்சி பிரிவில், 51% பணியிடங்கள் காலியாக இருந்தன, 632 இல் 308 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

* தேர்தலில் வாக்குகள் ‘திருடப்படுகின்றன”: 2024 மக்களவைத் தேர்தலின் போது கருநாடகாவில் உள்ள ஒரு தொகுதியின் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, “நாங்கள்… கருநாடகாவில் மிகப்பெரிய திருட்டைப் பிடித்துள்ளோம். அதை நான் நிரூபிக்க முடியும்” என உறுதிபட பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நீட்-பிஜி: தமிழ்நாடு தேர்வர்களுக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது: தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 1,000 தேர்வர்களுக்கு மாநிலத்திற்கு வெளியே மய்யங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் தெரிவித்தார்.

* புதிய ஜாதி வாரி கணக்கெடுப்பு கருநாடகா செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 7 வரை நடத்தப்படும்; கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அக்டோபர் இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது என கருநாடகா முதலமைச்சர் சித்தராமைய்யா அறிவிப்பு.

தி டெலிகிராப்:

* பீகார் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஜேடியு எம்.பி. கிரிதாரி யாதவ் எதிர்ப்பு. ‘கட்சி என்ன சொல்கிறது என்பது முக்கியமல்ல. இதுதான் உண்மை. உண்மையைச் சொல்ல முடியாவிட்டால், நான் ஏன் எம்.பி. ஆனேன்?’ என காட்டம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஜனவரி 1, 2025 நிலவரப்படி பல்வேறு சிஏபிஎஃப், அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் கிட்டத்தட்ட 1.1 லட்சம் காலியிடங்கள் இருப்பதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் தகவல்.

 – குடந்தை கருணா

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *