பாங்காங், ஜூலை 24- உலகின் பல நாடுகள் தங்களின் எல்லைகளை சுமூகமாக பாவிக்கின்றனர். இதற்கு எதிர்மாறாக பல்வேறு நாடுகள் தங்களின் எல்லைகளை வாழ்நாள் எதிரிநாடுகள் போன்றே பாவிக்கின்றனர்.
இந்தியா – பாகிஸ்தான், ருவாண்டா – உகண்டா, மெக்ஸிகோ – அமெரிக்கா என எல்லைப்பிரச்சினை இரு நாடுகளுக்கிடையே கடுமையான பகைமையை உருவாக்கியுள்ளது.
இதே போன்று தாய்லாந்து மற்றும் கம்போடியாவிற்கான எல்லைப் பிரச்சினையும் இருநாட்டிற்கிடையே ஓடும் நதிநீர் பிரச்சினை மன்னராட்சி காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது.
இந்தப் பிரச்சினை அவ்வப்போது பெரும் மோதலாக வெடித்து வருகிறது.
கண்ணிவெடி
இரு நாடுகளும் அய்க்கிய நாடுகள் அவையின் விதிகளையும் மீறி எல்லை எங்கும் கண்ணிவெடியைப் புதைத்து வருகிறது. இதனால் இரு நாட்டு எல்லையோரம் வாழும் கிராமங்களில் வசிக்கும் பள்ளிக்குழதைகள் முதல் முதியவர்கள் வரை உயிரிழந்தும் உடல் உறுப்புகளை இழந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள தா மவுன் தோம் என்ற புத்தர் ஆலயத்தில் நடக்கும் விழாவிற்காக தாய்லாந்து மக்கள் சென்றபோது கம்போடிய ராணுவம் ரப்பர் குண்டுகளைக் பயன்படுத்தி தாய்லாந்து மக்களை சுட்டது.
இதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பலர் காயமடைந்தனர். இதனை அடுத்து தாய்லாந்து மற்றும் கம்போடிய ராணுவத்துக்கு இடையே மோதல் எற்பட்டது.
இந்த மோதலின் போது கம்போடிய ராணுவம் தாய்லாந்து எல்லையில் புதைத்துவைத்த கண்ணிவெடி வெடியில் சிக்கி தாய்லாந்து வீரர் படுகாயமடைந்தார். இதனை அடுத்து இரண்டு நாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் அதிகரித்தது.
தூதரக உறவில் பாதிப்பு
கம்போடிய நாட்டின் இந்த அத்து மீறல் காரணமாக கம்போடி யாவுக்கான தனது தூதரை திரும்பப் பெறப் போவதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது
இந்த நிலையில் தாய்லாந்திற்கான கம்போடியத் தூதரை உடனடியாக பங்காங்கை விட்டு வெளியேறி தனது நாட்டிற்குத் திரும்பு மாறு கம்போடியா உத்தரவிட்டுள்ளது.
இந்த மோதல் போக்கால் இரண்டு நாடுகளுக்கிடையேயான பதட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இரு நாட்டு ராணுவமும் மோதலைத் துவங்கி விட்டதாக கூறப்படுகிறது. கம்போடிய ராணுவத்தின் தாக்குதலில் தாய்லாந்து பொது மக்கள் சிலர் மரணமடைந்து விட்டதாகவும் படுகாய மடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறிய தாய்லாந்து ராணுவம் தாங்கள் கம்போடியாவின் இரண்டு மாவட்டங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், தாய்லாந்து விமானப்படை கம்போடிய நகரங்களைத் தாக்க தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது.