பொதுக்கழிப்பறையை மூன்றாம் பாலினத்தவர் பயன்படுத்தலாம் ஹாங்காங் நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

ஹாங்காங், ஜூலை 24- ஹாங்காங்கில் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் ஆண்களுக்கான கழிப்பறையைப் பயன்படுத்தலாம் என்ற உரிமையை நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளார்.

மூன்றாம் பாலினத்தவர்

ஹங்காங் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கழிப்பறைகள் உள்ளன.

இதை பிறர் பயன்படுத்தக் கூடாது, அதே நேரத்தில் பொதுக்கழிப்பறையை மூன்றாம் பாலினத்தவர் பயன்படுத்தினால் அதற்கு அபராதமாக இந்திய மதிப்பில் ரூ.2500 வரை  கட்டவேண்டிய அவலம் உள்ளது.

வழக்கின் பின்னணி

ஹங்காங்கைச் சேர்ந்த பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் (திருநம்பி) தனது அலுவலகத்தில் உள்ள பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்த அலுவலகத்தில் அனுமதி கேட்ட போது அதற்கு அலுவலகம் மறுத்து விட்டது, வெளியில் உள்ள மூன்றாம் பாலினத்த வருக்கான கழிப்பறையைப் பயன்படுத்துங்கள் என்று கூறிவிட்டது.,

வழக்கு

வெளியில் உள்ள மூன்றாம் பாலினத்தவருக் கான கழிப்பறை சென்று வர சுமார் 20 நிமிடம் ஆகிவிடும். இந்த நிலையில் அலுவலகத்திலும் இதர இடங்களிலும் பொதுக்கழிப்பறையைப்  பயன்படுத்தும் உரிமைக்காக ஹாங்காங் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

நீதிமன்றம் மனித உரிமை மீறல் தொடர்பான  வழக்கை ஏற்றுக்கொண்டு மூன்றாம் பாலினத்தவர் பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று ஹாங்கங் பொது பயன்பட்டு விதிமுறை சட்டத்தில் மாற்றம் செய்ய உத்தரவிட்டது. மேலும் அந்தச் சட்டம் மனித உரிமைகளை மீறுகிறது என்று தீர்ப்பளித்தார்.

பாலின அடையாளத் தைப் பொருட்படுத்தாமல் அனைத்து தனிநபர்களும் கண்ணியமான மற்றும் பாதுகாப்பான பொதுக் கழிப்பறை வசதிகளைப் பயன்படுத்துவதற்கான உரிமையை உண்டு. மேலும் பாலினத்தை மாற்றுவதற்கு முழுமையான பாலின மாற்று அறுவை சிகிச்சை  அவசியமில்லை என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

ஒருவர் அவர் தான் ஆணாகவோ, அல்லது பெண்ணாகவோ சமூகத்தில் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்பினால் அது அவரது விருப்பம் இதற்காக அவர்களிடம் மருத்துவ அறுவைச் சிகிச்சை சான்று, அடையாள அட்டை போன்றவற்றை கேட்க கூடாது மேலும் பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதிக்க மறுப்பது சட்டவிரோதம் மனித உரிமை மீறல் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *