கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.7.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் நேற்று 2ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தல்

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* சட்ட மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

* குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென பதவி விலகியதற்கு பாஜக மேலிடத்தின் அழுத்தம் காரணமா? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பி உள்ளனர்.

தி இந்து:

* அதிகாரப் பகிர்வு குறித்து அதிமுகவும் பாஜகவும் முரண்பட்ட நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன. அதிமுக தொண்டர்களிடையே இது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* டில்லியில் ஜூலை 25இல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெறும் பிற்படுத்தப்பட்டோர் சம்மேளனத்திற்கு முதலமைச்சர் சித்தராமையா தலைமை தாங்குகிறார். பல ஆண்டுகள் கழித்து, காங்கிரஸ் தனது சமூக நீதிக்கான முன்னுதாரணத்தை மறுசீரமைக்கும் தருணம் இதுவாக இருக்கலாம் என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

*மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும், டிஜிட்டல் தரவு சேகரிப்பு மற்றும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஆகியவை இதில் அடங்கும் என்றும் இணை அமைச்சர் நித்யானந்த் ராய்  நாடாளுமன்றத்தில் பதில்.

தி டெலிகிராப்:

* ஓன்றியத்தில் ஆளும் பாஜக அரசாங்கம் வங்காள மொழிக்கும் மாநில மக்களுக்கும் எதிராக பாரபட்சமான கொள்கையைப் பின்பற்றுகிறது என மம்தா காட்டம்.

* ஆங்கில பாடப்புத்தகத்தில் சிக்கலான சொற்கள் மற்றும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத வாக்கியங்களை என்.சி.இ.ஆர்.டி. பயன்படுத்துவது எட்டாம் வகுப்பு புத்தகம் கற்றலைத் தடுக்கிறது என கல்வியாளர்கள் புலம்பல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஒன்றிய அரசின் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில்  கிட்டத்தட்ட 39% ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்.

 – குடந்தை கருணா

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *