மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க குடும்பத் தலைவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உங்கள் பகுதியில் எங்கு முகாம் நடைபெறுகிறது என்பதை https://ungaludanstalin.tn.gov.in/index.php இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் முகாம் நடைபெறும் இடத்தை கண்டறிந்து உடனே விண்ணப்பியுங்கள்.
மின்சாரம் இல்லாமல் இயங்கும் குளிர்சாதனப் பெட்டி
தடுப்பூசிகள் & உடல் உறுப்புகளை எடுத்துச் செல்ல சிறு குளிர்சாதனப் பெட்டியை 3 இந்திய இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் என்ன சிறப்பு என்றால், இதற்கு மின்சாரம் தேவையில்லையாம். மாறாக, அமோனியம் குளோரைடு & பேரியம் ஹைட்ராக்ஸைடு ஆக்டாஹைட்ரேட் ஆகிய உப்பு & நீர் இருந்தாலே இயங்குமாம். கிட்டத்தட்ட 10-12 மணிநேரம் வரை ஒரு மருந்தை பதமாக வைத்துள்ளதாம். இதனை மருத்துவமனையிலும் சோதித்துள்ளனர். இது பயனுள்ளதாக இருக்குமா?
முழுவதும் போர்த்திக் கொண்டு தூங்கலாமா?
தலை முதல் பாதம் வரை போர்த்திக் கொண்டு உறங்குவது வெதுவெதுப்பாக இருக்கலாம். ஆனால், இது உடலின் ஆக்சிஜன் நுகர்வைக் குறைத்து கார்பன் டை ஆக்சைடை அதிகமாக சுவாசிக்க செய்கிறது. எனவே, காற்றோட்டம் உள்ள வகையில், கழுத்துவரை அல்லது இலகுவான போர்வை மட்டும் போர்த்தி தூங்குவது ஆரோக்கியமானது.
அனில் அம்பானியின் ரூ.31,850 கோடி கடன்… சிபிஅய்யை நாடும் அரசு!
அனில் அம்பானி எஸ்பிஅய்-யிடம் வாங்கிய ரூ.31,850 கோடி கடனை மீட்க சிபிஅய்யை நாட உள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவையில் எழுப்பிய கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். இதை சுட்டிக்காட்டிய மதுரை மக்களவை உறுப்பினர், சாமானிய மக்களின் கடன்களை கழுத்தில் துண்டைப் போட்டு வசூலிக்கும் வங்கிகள், 9 ஆண்டுகளாக என்ன செய்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.