நேற்று (19.7.2025) மறைவுற்ற திரைக் கலைஞர் மு.க.முத்து அவர்கள் பாடிய பெரியார் பாடலான “தமிழரெல்லாம் மானத்தோடு தலைநிமிர்ந்து நிற்பதற்கு யார் காரணம்? பெரியார் காரணம்!” பாடல், அவரது நினைவைப் போற்றும் வகையில் பெரியார் விஷன் ஓடிடி தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. சமூக ஊடகங்களில் நேற்று அப் பாடல் அதிவிரைவாகப் பரவியது (viral). கலைஞர் செய்திகள், புதிய தலைமுறை உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் சமூக ஊடகங்களிலும் இப் பாடல் ஒலிபரப்பாகி வருகிறது.