அய்தராபாத், ஜூலை 19 இந்தியாவிலிருந்து அமெரிக்க படிக்கச்செல்லும் மாண வர்களின் எண்ணிக்கையில் 70 சதவீதம் வரையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டுவந்த கடுமையான விசா கட்டுப் பாடுகளால் இந்தச்சரிவு ஏற் பட்டுள்ளது.
தெளிவின்மை
அமெரிக்க பல்கலைக் கழகங்களில் படிக்க விரும்பும் மாணவர்கள் வழக்கமாக ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பெரும்பாலான மாணவர்கள் தங்கள் விசா நேர்காணல்களை முடித்துவிட்டு, அமெரிக்கா விற்கு புறப்படத் தயாராகி விடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு பெரும் ஏமாற் றம் ஏற்பட்டுள்ளதாக அய்தராபா த்தைச் சேர்ந்த வெளிநாட்டு ஆலோசகர் சஞ்சீவ் ராய் தெரிவித்துள்ளார். விசா இடங்கள் கட்டம் கட்டமாக வெளியிடப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதி யளித்திருந்தனர், இருப்பினும் நிறைய தெளிவின்மை இருப்பதால் மாணவர்கள் பதற்றமடைந்துள்ளனர்.
நிராகரிப்பு
மேலும், இடங்களை முன் பதிவு செய்யும் மாணவர்களால் உறுதிப்படுத்தலைப் பெற முடியவில்லை. இதன் விளைவாக, மாணவர்கள் கல்விக்காக மற்ற நாடுகளை நாடுகின்றனர். மார்ச் மாதத் திலேயே விண்ணப்பித்து நேர்காணல் நியமனங்களைப் பெற்ற மாணவர்கள் தற்போது வழக்கத்திற்கு மாறாக அதிக நிராகரிப்பு விகிதத்தை எதிர்கொள்வது மற்றொரு பிரச்சினையாக எழுகிறது. பிரிவு 214B காரணமாக அவர்களின் விசா நிராகரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இந் தியா 3.3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி சீனாவை முந்தியது. ஜனவரி 1, 2024 நிலவரப்படி, 11.6 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் படித்து வருகின்றனர் இதில் ஐரோப்பிய நாடுகளை நாடும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றே இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.