செய்திச் சுருக்கம்

viduthalai

வெறிச்சோடிய ஆர்ப்பாட்டம்…

 நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி

மதுரை மாநகராட்சியில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, அண்மையில் அங்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அதிக எண்ணிக்கையில் பாஜகவினர் பங்கேற்க வேண்டும் என கட்சியில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கூட்டம் அலைமோதும் என நயினார் எதிர்பார்த்ததாகவும், ஆனால், வெறும் 300 பேரே கலந்து கொண்டதால் அவர் அப்செட் ஆனதாகவும் சொல்லப்படுகிறது.

கொழுப்பு கல்லீரல் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன?

கல்லீரலை சுற்றி கொழுப்பு படிவதே கொழுப்பு கல்லீரல் (FATTY LIVER). வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் சந்திக்கும் புதிய உடல் பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளது. இதனை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்க முடியும். அவை: அடிக்கடி வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, உடல் சோர்வு, அடி வயிற்றின் மேல் பகுதியில் சிறிய வலி. மேற்கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

ஆண்களுக்கு ஆபத்து: எச்சரிக்கும் மருத்துவர்கள்

சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை பாதிக்கும் என்கிறது ஆய்வு முடிவு. ஆகவே, பின்வரும் உணவுகளில் கவனம் தேவை:

துரித, உடனடி & பாக்கெட் உணவுகள் – இதிலுள்ள டிரான்ஸ் கொழுப்பு ஆபத்தானது. அதிக கொழுப்பு உள்ள பால் பொருட்கள், பூச்சிக்கொல்லிகள் & BPA ரசாயனம் கலந்த காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோயா உணவுகள் இதன் உட்பொருள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.

கடலுக்கு அடியில் நீர்வீழ்ச்சியா? அதிசயம், ஆனால் உண்மை!

கடலுக்கடியில் நீர்வீழ்ச்சியா? அதெப்டிங்க சாத்தியம்னு நீங்க கேட்குறது புரியுது. இது நாம் வழக்கமா பார்க்குற பாறை நீர்வீழ்ச்சி கிடையாது. ஆனால், கடலின் ஆழத்தில் வெவ்வேறு நீர்நிலைத் தன்மை கொண்ட நீரோட்டங்கள் கலக்கும்போது நீர்வீழ்ச்சி போல காட்சி தருகிறதாம். டென்மார்க் நீரிணை பகுதியில் இப்படி ஒரு காட்சி காணக் கிடைக்கிறது. இதனை வெறுங்கண்ணில் பார்க்க முடியாது. கடலறிவு கருவிகள் மூலம் படம்பிடிக்கலாம்.

 

இங்கல்ல – உ.பி.யில்

குடுமிப்பிடி சண்டை போட்ட பெண் வழக்குரைஞர்கள்

உ.பி.,யின் மதுராவில் பெண் வழக்குரைஞர்கள் 2 பேர் அடித்துக் கொண்ட காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. லா சேம்பர் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை, சாலையில் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்துக் கொள்ளும் அளவுக்கு பெரிதாகிவிட்டது. ஒரு சின்னப் பிரச்சினைக்கு இவ்வளவு அக்கப்போரா என வலைதளங்களில் பதிவு செய்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதானிக்கு எதிராக இருப்பதால் எனது மகன் கைது: பூபேஷ்

சத்தீஸ்கர் மேனாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பாஹலின் மகனை அமலாக்கத்துறை நேற்று (18.7.2025) கைது செய்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த பூபேஷ் பாஹல், தொழிலதிபர் அதானிக்கு எதிராக காங்., போராடுவதாகவும், ஆதலால் காங்., குரலை நசுக்க இதுபோன்ற தந்திரம் (கைது) கையாளபடுவதாகவும் விமர்சித்தார். இதைக்கண்டு காங்கிரஸ் அச்சப்படவோ (அ) மண்டியிடவோ செய்யாது என்றும் பூபேஷ் கூறினார்.

நீண்ட காலத்திற்கு பின் விடுதலை… இழப்பீட்டுக்கு சட்டம்

வழக்குகளில் குற்றவாளி இல்லை என நீண்ட காலத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள நபர் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம்  விசாரித்தது. சரியாக விசாரணை நடத்தாமலும், ஆதாரமில்லாமலும் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறி, அவரை விடுவித்த உச்சநீதிமன்றம், இழப்பீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *