« சென்னை அரசு பொது மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் புற நோயாளி களாக பயன்பெற்றவர்கள் 52 லட்சம் பேர்.
«இங்கிலாந்தில் வாக்களிப்பதற்கான வயது 16 ஆக குறைப்பு.
«தி.மு.க.வில் இரண்டரை கோடி பேரை சேர்க்க வேண்டும். போலி உறுப்பினர்கள் சேர்த்தால் பதவி பறிக்கப்படும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை.
« மூன்று நீதிபதிகள் அமர்வு ஆணை பிறப்பிக்கும் வரை மாநிலம் முழுவதும் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உத்தரவாதம்.
«பாலியல் துன்புறுத்தலால் தீக்குளித்து இறந்த மாணவிக்கு நீதி கேட்டு பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு.
« பாமக நிறுவனர் ராமதாஸ் குடியிருக்கும் திண்டிவனம் தைலாபுரம் வீட்டில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது யார் என்பது மூன்று நாளில் அம்பலமாகும். டாக்டர் ராமதாஸ் பேட்டி.
அமர்நாத்தின் உறுதி
ஒரு முன்னுதாரணம்: சு. வெங்கடேசன் எம்.பி.,
கீழடி குறித்து வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பி னர்கள் இரு அவைகளிலும் குரல் எழுப்புவோம் என சு.வெங்கடேசன் தெரிவித்தார். கீழடி ஆய்வறிக்கையை திருத்தம் செய்யமாட்டேன் என அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய சு.வெங்கடேசன், அமர்நாத்தின் உறுதி நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம் என்றும், ‘கீழடி உண்மை’ தான் இந்த உறுதிக்கு காரணமெனவும் தெரிவித்தார்.
செய்தியும் சிந்தனையும்…
பா.ஜ.க. தோல்வி பதற்றத்தில்
செய்தி: அரசியல் பிரச்சாரத்திற்கு நான்கு அதிகாரிகளை நியமிப்பதா? ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் எல்.முருகன் கண்டனம்.
சிந்தனை: அரசின் திட்டங்களை செயல் படுத்த மக்களை சந்திப்பது குற்றமானதா? அந்தோ பாவம்! பா.ஜ.க. தோல்வி பதற்றத்தில் இருக்கிறது.