16.07.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-140க்குட்பட்ட சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் நவீன கலையரங்கம் கட்டுமானப் பணியினைத் தொடங்கி வைத்து, கட்டட வரைபடத்தினைப் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய வட்டார துணை ஆணையாளர் எச்.ஆர்.கவுஷிக், கோடம்பாக்கம் மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் எம்.சிறீதரன், மண்டல அலுவலர் பி.முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.