அமிர்தசரஸ், ஜூலை 16 பஞ்சாப் பொற்கோவிலுக்கு நேற்று 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மோப்ப நாய் குழு ஒன்று கோவிலில் சோதனை மேற்கொண்டது. இதுபற்றி ஷிரோமணி குர்த்வாரா பர்பந்தக் கமிட்டியின் செயலாளர் பிரதாப் சிங் கூறும்போது, பொற்கோவில் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் முக்கிய மத வழிபாட்டு தலம் ஆகும்.
இதற்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறை அதிகாரிகளின் கடமையாகும் என கூறியுள்ளார்.
இதுபற்றி பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநரக்கு கமிட்டி சார்பில் கடிதம் எழுதியுள்ளோம் என்றும் கூறினார். எனினும், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பக்தர்கள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டார். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.